News

News

பிளஸ் 2 தேர்வு: ஆக்ஸ்போர்டு பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

 

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 94 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி ஆர்.வந்தனா 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்றார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:தமிழ்-98, ஆங்கிலம்-97, இயற்பியல்-100, வேதியியல்-100, கணினி அறிவியல்-99, கணிதம்-97.

 

இப்பள்ளி மாணவர் ஜி.விமல் 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-93, இயற்பியல்-99, வேதியியல்-100, உயிரியல்-100, கணிதம்-99. இப்பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவ. மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 38 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர்.

 

மேலும் இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 4 பேரும், உயிரியலில் 3 பேரும், கணினி அறிவியலில் ஒருவரும், கணக்கியலில் 2 பேரும், வணிகவியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பிளஸ் 2 தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் முதல் மதிப்பெண்ணாக 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சாதனை படைத்த மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) இராமசுப்பு, ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

மாவட்ட இறகு பந்து போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி முதலிடம்

இலஞ்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியான மெர்வின் முதலிடம் பெற்றார்.

தென்காசி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை இறகு பந்து விளையாட்டுப் போட்டிகள் இலஞ்சி இராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
     
இப்போட்டிகளில் ஒற்றையர் பிரிவு பெண்களுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியான மெர்வின் முதலிடம் பெற்றார். இவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்மாணவி மாநில அளவிலான இறகு பந்து போட்டிக்கு தகுதி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவி ரியான மெர்வினை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
 

 

மாநில தடகளப் போட்டி ஆக்ஸ் போர்டு பள்ளி மாணவர் முதலிடம்

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தகடளப் போட்டிகளில் 800 மீ ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார்.

சென்னை தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 4வது தமிழ்நாடு மாநில இளைஞர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் 800 மீ ஓட்டத்தில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார். அவருக்கு முதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் பாரத் கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற தேசிய இளைஞர் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தகுதி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர் பாரத்தை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
 

கணிதப் பதக்கத் தேர்வு ஆக்ஸ் போர்டு பள்ளி மாணவி வெற்றி

        தென்காசி அருகேயுள்ள இ. விலக்கு ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பென்னாக்கிள் கணிதப் பதக்கத் தேர்வு 2023 நடைபெற்றது.

                   இத்தேர்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இத்தேர்வில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கிறிஸ்டினா ஜெனி இரண்டாமிடம் பெற்றார். இவருக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் ரூ. 3 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

            தேர்வில் வெற்றி பெற்ற மாணவி கிறிஸ்டினா ஜெனியை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான  தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
 

 

சாரல் 2023 போட்டிகளில் ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன்

செங்கோட்டை அருகே நடைபெற்ற சாரல் 2023 போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புதூர் புலரி மெட்ரிகுலேசன் பள்ளியில் தென்காசி கல்வி மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சாரல் 2023 போட்டிகள் நடைபெற்றன.

ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் மற்றும் அருவி அகாடமி பைன் ஆர்ட்ஸ் இணைந்து நடத்திய சாரல் 2023 போட்டிகளில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிலம்பம், யோகா, கீபோர்டு, ஸ்கேட்டிங் மற்றும் பரதநாட்டிய போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 108 பேர் கலந்து கொண்டனர். இதில் யோகா போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் அமுதேஷ், சோனிஸ்ரீ, வேதா, நதிமா ஆகியோர் முதலிடமும், யோஜித், முகேஷ், சுபகார்த்திகா, மதன்குமார், மகாலெட்சுமி, வெற்றிவேல் முருகன் ஆகியோர் இரண்டாமிடமும், கார்த்திக் லாவனேஷ், ஸ்ரீ சக்தி, முதுகிஷரா, சிவசக்திவேல் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.

ஸ்கேட்டிங் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் முகமது அசார், சிவகார்த்திகேயன், வைஷ்ணவ், விஷ்ணு ஸ்ரீ மாரி முகேஷ், யாகேன் மார்க்வாக், நமதேஷ், அனுஷ்; பாலு, முருகவேல் ஆகியோர் முதலிடமும், ஸ்ரீராம் வைசாக், ரான்ஷா பெர்னாண்டோ, யோகேஷ், பஸ்பக் ராஜா ஆகியோர் இரண்டாமிடமும், தீன பிரஜித், முகமது அப்ரித், சித்தார்த், ஆதிஷ், கலிட்பாவா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.

சிலம்ப போட்டியில் ஸ்ரீரதீஷ்; பாலன், பிரபாகர், கவிஷ்; ஆகியோர் முதலிடமும், சரவண சுப்பையா, ஜெயகவுதம், நவீன், பொன்னீஸ்வரன், சிவதர்சன், சந்தோஷ் ஆகியோர் இரண்டாமிடமும், சதீஷ் குமார், ராம் கிஷோர், உமர்பாரூக், பாலகாந்த், அக்ஷயா மாலினி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். 

கராத்தே போட்டியில் முகமதுஷாஜித், சந்தோஷ் ஆகியோர் முதலிடமும், கபிஷ் இரண்டாமிடமும், கரிஷ் ராம், அபிசேக்ராம் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.

பரத நாட்டியத்தில் பிரணவி இரண்டாமிடம் பெற்றார். கீ போர்டில் கிருத்திக் முதலிடமும், ஜிவின்ரோ ரகோபத் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

     மேலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

     வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு அறிவியல் இன்ஸ்பயர் விருது

 தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மதுபாலா அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்றார். மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் இன்ஸ்பயர் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப் போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மதுபாலா காலணிகளில் இருந்து மொபைல் சார்ஜிங் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார்.

இதில் மாணவி மதுபாலா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் சான்றிதழ்களும், ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசும், அறிவியல் இன்ஸ்பயர் விருதும் மாணவி மதுபாலாவிற்கு வழங்கப்பட்டன.
அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்ற மாணவி மதுபாலாவை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, பள்ளி இயக்குநரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தைதெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பமாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குடியரசு தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான     கே. திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான      தி. மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி தனியார் பள்ளிகள்) ஏ. ராமசுப்பு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார்.

மாணவி காஸிரா வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையா சிரியை முனைவர் சுப்பம்மாள் மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்டம் குறித்தும், குடியரசின் சிறப்புகள் குறித்தும் பேசினர்.

நடனம், சிலம்பம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் நடத்தினர். 

நிகழ்ச்சிகளை மாணவர் சஞ்சய் தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

முடிவில் மாணவி சிவ தனிக்ஷிதா நன்றி கூறினார்.
 

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்ட நுழைவுத் தேர்வு ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை.

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்ட நுழைவுத் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 21 பேர் வெற்றி பெற்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித்
திறனை மேம்படுத்த பிரதமர் மோடி பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதனடிப்படையில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெறும் மாணவர்களுக்கு
நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் பொது அறிவு குறித்த கேள்விகள் அடங்கிய தேசிய அளவிலான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்ட நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய தேர்வு முகாமை நடத்தியது.

இத்தேர்வில் பங்கேற்ற தென்காசி
குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு மாணவர்கள் அஜய்கிருஷ்ணா, தீபிகா, லீமபிரியா, ராஜ ஹரிஹர சுதன், ஜனனி, குரு பிரதீப், ராகுல், வசந்த், அனுஸ்ரீ, மதன்குமார், தன நந்தகுமார், குருபிரசாத், ஆகாஷ் ஆகியோரும்,

9ம் வகுப்பு மாணவர்கள் சுபிக்ஷா, ஆர்த்தி, சபரீஷ், மஞ்சு, பரத்குமார், செல்வதாரணி, ஜெய்சுதர்வேல், மகாலெட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர். மாவட்டத்தில் அதிக மாணவர்கள் வெற்றி பெற்ற பள்ளிகளில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.

தேர்வில் வெற்றி பெற்ற 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரமும், 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையாக ரூ. 75 ஆயிரமும் வழங்குகிறது. பள்ளி கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் கல்வி சார்ந்த கட்டணங்களை இத்தொகையில் இருந்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் செலுத்திக்
கொள்ளலாம்.

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான      கே. திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான       தி. மிராக்ளின் பால்சுசி,
தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை யாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

1 2 3 4 5 6 ... 20 >