News

News

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் வெற்றி

கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். கோயம்புத்தூர் துப்பாக்கி சுடும் மைதானத்தில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் அமைப்பு சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் உதய இசக்கி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெற்றி பெற்றார். இவர் தென்னிந்திய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மாணவர் உதய இசக்கியை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

மாநில தடகளப் போட்டிக்கு ஆக்ஸ்போர்டு பள்ளி தேர்வு

மாநில தடகளப் போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்ட வருவாய் அளவிலான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் மாணவர்களுக்கான சீனியர் பிரிவு 3000 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்பள்ளி மாணவி அபிஷா சூப்பர் சீனியர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில்; வெற்றி பெற்று மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மாணவர் பாரத் மற்றும் மாணவி அபிஷாவை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

மாநில இறகு பந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில இறகுப் பந்து போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருநெல்வேலி பேட்டை 999- இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கில் திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நவீன், ரிச்சர்ட் மெர்வின் ஆகிய இருவரும் சூப்பர் சீனியர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். இவர்கள் இருவரும் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற இரு மாணவர்களையும் ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

மாநில இறகுப் பந்து போட்டி ஆக்ஸ்போர்டு : பள்ளி மாணவி தேர்வு

மாநில இறகுப் பந்து போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியான மெர்லின் தேர்வு செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பைலட் இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியானமெர்லின் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று மாநில அளவிலான இறகுப் பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவியை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி, அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினம் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் ஆதிசிவசாய்ராம் வரவேற்று பேசினார். டாக்டர் அப்துல்கலாமின் சாதனைகள் குறித்து மாணவ, மாணவிகள் பேசினர். டாக்டர் அப்துல்கலாம் வேடம் அணிந்து வந்த மாணவர்கள் விக்னேஷ்பாபு, புகழேந்தி, ராகவேந்திரா, மாணவி சக்தி துளசி ஆகியோர் அப்துல்கலாமின் நெறிமுறைகளை பற்றி பேசினர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்துல்கலாம் பற்றிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவி வந்தனா தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மாணவி சவுமியாள் ஜெயக்கனி நன்றி கூறினார்.

மாநில சதுரங்க போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி தேர்வு

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில சதுரங்க போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சேதுசிவராம் மிக மூத்தோர் பிரிவில் இரண்டாமிடமும், இப்பள்ளி மாணவி மகாலெட்சுமி மிக மூத்தோர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர். இவ்விருவரும் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில சதுரங்கப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் சேது சிவராம், மாணவி மகாலெட்சுமி ஆகியோரை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

தென்காசி வட்ட கோ-கோ போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி வட்ட அளவிலான கோ-கோ போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. தென்காசி குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டி இலத்தூர் கதிர்காந்தம் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கார்த்திகேயன், லியான், அனுசன், பாலாஜி, பாஸ்கர், புவனேஷ்வர், புவனேஷ், ஐரிஸ் ஜபர்சன், ஜோஸ், பரணி, சுதர்சன், ஜான் லியோன், சபரி பாலசுந்தர் ஆகியோர் சூப்பர் சீனியர் பிரிவு கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

மாநில கை எறிபந்து இறகு பந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலாக நடைபெறும் கை எறிபந்து மற்றும் இறகு பந்து போட்டியில் கலந்து கொள்ள தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி கன்னியாகுமரி வட்டாரம் சார்பில் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கை எறிபந்து போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழுவினர் கலந்து கொண்டனர்.   இதில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஸ் ஜூனியர் பிரிவிலும், மாணவர் லிமான் சூப்பர் சீனியர் பிரிவிலும் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.பாளையங்கோட்டை விங்ஸ் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் நவீன் சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ் பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

< 1 ... 8 9 10 11 12 ... 20 >