News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் ஆசிரியர் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் விநாயகம் வரவேற்றுப் பேசினார். மாணவிகள் சுபிக்ஷா, முத்துலாவண்யா, நிகிதா ஆகியோர் ஆசிரியர் தின சிறப்புகள் குறித்து பேசினர்.  ஆசிரியர் சிவகுமரன், ஆசிரியைகள் சகாயராணி, ஜான்டயானா, ராஜாத்தி, ஆனந்த ஜோதி, லூர்து அமுதா, பெல்லா, மாரியம்மாள், ஆரோக்கியமேரி, அபிநயா, சவுமியா, பிளாரன்ஸ் மற்றும் பலர் ஆசிரியர் தின கலை நிகழ்ச்சி நடத்தினர். ஆசிரியர்களின் பணி அறப்பணி என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஆசிரியை திவ்யா தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியை பவித்ரா நன்றி கூறினார்.

தென்காசி வட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிகள் முதலிடம்

தென்காசி குறு வட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். தென்காசி குறுவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த அணியினர்  கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் கலந்து கொண்ட குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியைச் சேர்ந்த மாணவிகள் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றனர். இம்மாணவிகள் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ்,  பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

தென்காசி வட்ட மேஜைபந்து போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி குறுவட்ட மேஜைபந்து விளையாட்டு போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. தென்காசி குறுவட்ட அளவிலான மேஜைபந்து விளையாட்டு போட்டி தென்காசி பி.எஸ்.எஸ்.ஜெகநாத் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜூனியர் மற்றும் சீனியர் மேஜைபந்து போட்டியில்  ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர்.மாணவிகள் ஒற்றையர் போட்டியில் ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவிலும் இரட்டையர் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவிலும் இப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான மேஜைபந்து விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராஜம்மாள் மற்றும் பலர் பாராட்டினர்.

தென்காசி குறுவட்ட இறகு பந்து போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி குறுவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. தென்காசி குறுவட்ட அளவிலான இறகு பந்து போட்டி தென்காசி பி.எஸ்.எஸ்.உள் விளையாட்டு அங்கில் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சூப்பர் சீனியர் மாணவர் ஒற்றையர் பிரிவில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் நவீன் முதலிடமும், இரட்டையர் பிரிபில் இப்பள்ளி மாணவர்கள் நவீன், ரிச்சர்ட் மெர்வின் ஆகியோர் முதலிடமும் பெற்றனர். ஜூனியர் மாணவியர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவி ரியானா மெர்வின் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற இம்மூவரும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற் கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கிதுரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

தென்காசி குறுவட்ட தளகடப் போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன்

தென்காசி குறுவட்ட தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். தென்காசி குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி குறுவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். சீனியர் பிரிவு மாணவர்களுக்கான 800 மீ, 1500 மீ, 3000 மீ ஓட்ட பந்தயங்களில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார்.  4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் பாரத், அன்சன்தாஸ், பாலா, உதயா ஆகியோர் முதலிடமும், 100 மீ மற்றும் 200 மீ ஓட்டத்தில் மாணவர் சிவப்பிரகாசம் இரண்டாமிடமும்,  4க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் சிவப்பிரகாசம், வெங்கடேஸ்குமார், ராஜசெல்வம், இளவரசு ஆகியோர் இரண்டாமிடமும்  பெற்றனர். 400 மீ ஓட்டத்தில் மாணவர் பாலா மூன்றாமிடமும்,  மும்முறை தாண்டுதலில் மாணவர் அழகுசூர்யா இரண்டாமிடமும், 3000 மீ ஓட்டத்தில் மாணவர் உதயா மூன்றாமிடமும், உயரம் தாண்டுதலில் மாணவர் வெங்கடேஸ்குமார் இரண்டாமிடமும், குண்டு எறிதலில் மாணவர் ஆகாஷ் இரண்டாமிடமும் பெற்றனர். ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதலில் மாணவர் இமத்வஜன் சுர்ஜித் இரண்டாமிடமும், குண்டு எறிதல் மற்றும் 60 மீ ஓட்டத்தில் மாணவர் மதீஸ் மூன்றாமிடமும், 4க்கு 100 தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் இமத்வஜன் சுர்ஜித், அஜிம் முஸ்தபா, அகஸ்டீன், மதிஸ் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.சூப்பர் சீனியர் பிரிவில்  4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் கார்த்திகேயன், பரணி, பிரகாஷ்ராஜ், சபரி பாலசுந்தர் ஆகியோர் முதலிடமும், 4க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் லியோன், முகமது கனி அனாஸ், ருத்ரேஷ் வசந்த், சிவசுப்பிரமணியன் ஆகியோர் முதலிடமும் பெற்றனர்.  200 மீ ஓட்டத்தில் மாணவர் லியோன் முதலிடமும், மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடமும், உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றார். 800 மீ ஓட்டத்தில் மாணவர் கார்த்திகேயன் இரண்டாமிடமும், 1500 மீ ஓட்டத்தில் மாணவர் சபரி பாலசுந்தரர் இரண்டாமிடமும், 3000 ஓட்டத்தில் மாணவர் பிரகா~;ராஜ் இரண்டாமிடமும், மாணவர் பரணி மூன்றாமிடமும், நீளம் தாண்டுதலில் மாணவர் புவனேஷ்குமார் இரண்டாமிடமும் பெற்றனர். மாணவிகள் ஜூனியர் பிரிவில் உயரம் தாண்டுதலில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி சுவாதி இரண்டாமிடம், 200 மீ ஓட்டத்தில் மாணவி கஜஉதயா மூன்றாமிடமும் பெற்றனர். சீனியர் பிரிவில் 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில்  மாணவி அபிஷா முதலிடமும், உயரம் தாண்டுதலில் மாணவி சுபஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் பாரத் மாணவர்கள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டமும், இப்பள்ளி மாணவி அபிஷா மாணவிகள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். சாம்பியன் பட்டம் மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமங்களின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கிதுரை, வெங்கடேஷ், பார்வதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

தென்காசி குறுவட்ட கை எறிபந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி குறுவட்ட கை எறிபந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். தென்காசி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆய்க்குடி எபநேசர் கார்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவு எறிபந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கை எறிபந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி  ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுதந்திர தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் சுந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சார்பில் நடைபெற்ற 73வது சுதந்திர தின விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஷிவாணி வரவேற்று பேசினார். பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். மாணவிகள் மகாலெட்சுமி, ரோஜா, சண்முகப்பிரியா, மதுமிதா ஆகியோர் சுதந்திரம் பெற்றது மற்றும் பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்பது பற்றி பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவி சரபினா தொகுத்து வழங்கினார்.விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி செண்பகாதேவி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் தமிழ்மன்ற விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ் மன்ற விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி நித்ய கல்யாணி வரவேற்று பேசினார்.வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து மாணவ, மாணவிகள் பேசினர்.  கவிதை, பாடல்கள், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புலவர் காக்கைப்பாடினியார் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை மாணவி மாரியம்மாள் தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி அஜிஸா நன்றி கூறினார்.

< 1 ... 9 10 11 12 13 ... 20 >