தென்காசி குறுவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். தென்காசி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் குற்றாலம் ஐந்தருவி செய்யது ரெசிடென்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி குறுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவு பெண்கள் கைப்பந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். சீனியர் பிரிவு பெண்கள் கைப்பந்து போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிகள் மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கிதுரை, பால்மதி, வெங்கடேஷ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.






தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சரபினா வரவேற்று பேசினார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுல்தான் பாஷா தேசிய கொடியேற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அஜ்மல் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் பாலசெந்தில்குமார் குடியரசு தின உரையாற்றினார். மாணவர் வெஸ்லி தாமல் ஜோ, மாணவி நித்ய கல்யாணி ஆகியோர் குடியரசு தினம் என்ற தலைப்பில் பேசினர். மாணவர் ஹரிபிரகாஷ் கவிதை வாசித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. முடிவில் மாணவி லதிபாஇஷானா நன்றி கூறினார்.