News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக வாழ்வியல் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் உலக வாழ்வியல் தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக வாழ்வியல் தின விழாவிற்கு பள்ளி முதன்மை முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார்.  மாணவி ஜெசிகா வரவேற்றுப் பேசினார்.  மாணவர் முகமது யுனுஸ், மாணவி பிரதக்ஷனா ஆகியோர் உலக வாழ்வியல் தினம் பற்றி பேசினர். நடனம், பாட்டு, கவிதை, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, துணுக்குப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  உலக வாழ்வியல் தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் மாணவி மாதுரி நன்றி கூறினார்.

மாரத்தான் போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் வெற்றி

கரம் யோகத்தான் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். நெல்லை கோடகநல்லூரில் கரம் யோகத்தான் மாரத்தான் போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கான 5 கி.மீ., மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் இரண்டாமிடம் பெற்றார். அவருக்கு வெள்ளிப் பதக்கமும், ரூ.2 ஆயிரம் ரொக்கமும் பரிசாக நெல்லை மாவட்ட கலெக்டர்ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கி பாராட்டினார்.  மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் பாரத்தை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி ஆண்டு விழா : ஓய்வு பெற்ற நீதிபதி பங்கேற்பு

மாணவர்கள் படித்து முடித்ததும் நாட்டிற்கு உழைக்க முன் வர வேண்டும் என தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் ஓய்வுபெற்ற நீதியரசர் பாஸ்கரன் பேசினார். தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசரும், தமிழக நீதித்துறை அதிகாரிகளின் சங்க முன்னாள் தலைவருமான பாஸ்கரன் தலைமை தாங்கினார்.  ஓய்வு பெற்ற நீதிமன்ற பதிவாளர் நீதிபதி உதயன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மீனாட்சிசுந்தரம், பாண்டுரங்கன், ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் வெஸ்லிதாமஸ் ஜோ வரவேற்றுப் பேசினார். சக்திநகர் சியோன் ஆலய போதகர் அருள்ராஜ் சிறப்பு பிராத்தனை செய்தார். மாணவிகள் முத்துலெட்சுமி, ஜெகோசேகா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். 

பள்ளி மாணவ பேண்ட் வாத்தியக்குழுவினரின் வரவேற்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட நீதியரசர் பாஸ்கரன் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:மாணவ, மாணவிகள் கடுமையாக உழைத்திட வேண்டும். பக்தி கொள்ள வேண்டும். ஒழுக்கம் உடையவர்களாக திகழ வேண்டும். படிப்பை முடித்து விட்டு நாட்டிற்கு உழைக்க முன்வரவேண்டும். படித்த பள்ளியை மறந்து விடக்கூடாது.  கல்வியிலும், விளையாட்டிலும்  திறமைளை வெளிப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களின் எண்ணங்களை குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது. குழந்தைகளிடம் என்ன திறமைகள் மறைந்திருக்கிறது என்பதை கண்டறித்து அத்திறமைகளை வெளிப்படுத்த உதவிட வேண்டும். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்து கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதியரசர் பாஸ்கரன் பேசினார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு சிறப்பு வழக்கறிஞர் அருள்வடிவேல் (எ) சேகர், சட்டப்பேராசிரியர் டாக்டர் முகமது, நர்சரி பள்ளிகள் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், பேராசிரியை டாக்டர் அனார்கலி, வழக்கறிஞர்கள் பாலசெந்தில்குமார், இராமசாமி மற்றும் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவிகள் முத்துலெட்சுமி, ஜெகோசேகா ஆகியோர் பள்ளி வரலாறு என்ற தலைப்பில் பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிகளை மாணவர் வெஸ்லிதாமஸ்ஜோ, மாணவி மகேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் பெற்றோர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் திருமலை மற்றும் மாணவர் ஆரீஸ் ஆகியோர் நன்றி கூறினர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆண்டு விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தென்காசி மாவட்ட அளவில் தடகளப் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி கல்வி மாவட்ட தடகளப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது. பங்களாச்சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகம்மது மீரான் ஜூனியர் பிரிவு 100 மீ ஓட்டம் மற்றும் 200 மீ ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவர் வெங்கடேஷ்குமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும், 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர்கள் முகம்மது மீரான், வெங்கடேஷ்குமார், நவீன்வேலாயுதம், பரத் ஆகியோர் 4க்கு100 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர். மாணவர் சீனியர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் லியான், அழகுசூர்யா, சிவபிரகாசம், சிவசுப்பிரமணியன் ஆகியோர் 4க்கு100 மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், சூப்பர் சீனியர் பிரிவில் இப்பள்ளி மாணவர் வேணுகோபால் குண்டு எறிதலில் இரண்டாமிடமும் பெற்றனர்.மாணவிகள் ஜூனியர் பிரிவில் இப்பள்ளி மாணவி சுருதிகா குண்டு எறிதலில் முதலிடமும், சூப்பர் சீனியர் பிரிவில் அபிஷா 100 மீ ஓட்டம் மற்றும் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், 100 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றனர். மாணவர் ஜூனியார் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகம்மது மீரான் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், மாணவிகள் சூப்பர் சீனியர் பிரிவில் இப்பள்ளி மாணவி அபிஷா தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை  ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜபாண்டி, பால்மதி, செல்வம், வெங்கடேஷ்குமார் மற்றும் பெற்றோர்கள் உட்டப பலர் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் ஆசிரியர் தின விழா

AfrikaansAlbanianAmharicArabicArmenianAzerbaijaniBasqueBelarusianBengaliBosnianBulgarianCatalanCebuanoChichewaChineseCorsicanCroatianCzechDanishDetect languageDutchEnglishEsperantoEstonianFilipinoFinnishFrenchFrisianGalicianGeorgianGermanGreekGujaratiHaitian CreoleHausaHawaiianHebrewHindiHmongHungarianIcelandicIgboIndonesianIrishItalianJapaneseJavaneseKannadaKazakhKhmerKoreanKurdish (Kurmanji)KyrgyzLaoLatinLatvianLithuanianLuxembourgishMacedonianMalagasyMalayMalayalamMalteseMaoriMarathiMongolianMyanmar (Burmese)NepaliNorwegianPashtoPersianPolishPortuguesePunjabiRomanianRussianSamoanScots GaelicSerbianSesothoShonaSindhiSinhalaSlovakSlovenianSomaliSpanishSundaneseSwahiliSwedishTajikTamilTeluguThaiTurkishUkrainianUrduUzbekVietnameseWelshXhosaYiddishYorubaZulu

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளயில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார். மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை பள்ளி தாளாளர் அன்பரசி ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.  பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆசிரியர் தினம் பற்றி பேசினர். பாட்டு போட்டி, கவிதைப் போட்டி, பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, இசைப் போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றி வெற்றி பெற்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இன்னிசை, நடனம், நாடகம், பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

யோகா போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன்

கடையநல்லூரில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு யோகா பெடரேசன், நெல்லை மாவட்ட யோகா விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் 28வது ஆண்டு மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. போட்டிக்கு தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி திரிவேணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு யோகா பெடரேசன் பொதுச்செயலாளர் ராஜமகேந்திரன் முன்னிலை வகித்தார். பெடரேசன் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் கிராண்ட்மாஸ்டர் அரவிந்த் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 952 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முத்துராம், விகாஷ், முகிலன், மாணவிகள் விஷாலி, பவதாரணி, அருணநாயகி ஆகியோர் முதலிடம் பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவர் சிவா, மாணவிகள் மகாசக்தி, அஸ்வதி, ஹேமாஹரிதஸ்ரீ, முகஸ்ரீ ஆகியோர் இரண்டாமிடமும், ராகவி, கிருஷ்ணபிரியா, ஹவிஸ் ஆகியோர் மூன்றாமிடமும்,  பிரதீபா, இலக்கியஸ்ரீ ஆகியோர் நான்காமிடமும் பெற்றனர்.  மேலும் இப்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

தடகளப் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன்

தென்காசி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மாணவர் ஜூனியர் பிரிவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகமது மீரான் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம்தாண்டுதல் ஆகியவற்றில் முதலிடம் பெற்றார். இப்பள்ளி மாணவர் வெங்கடேஷ்குமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும், 100மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் பாரத் 600 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர்கள் நவீன் வேலாயுதம், வெங்கடேஷ்குமார், பாரத், முகமது மீரான் ஆகியோர் தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர். சீனியர் பிரிவில் மாணவர் நவீன் 3000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், லியான் 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவாக்ள் லியான், அழகுசூர்யா, சிவபிரகாசம், சிவசுப்பிரமணியன் ஆகியோர் தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர். சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர் வேணுகோபால் குண்டு எறிதலில் முதலிடமும், சபரி பாலசுந்தர் 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், அரவிந்த் சங்கர் 5000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மீரான்மைதீன் 800 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர்கள் முகமது சவீஸ், சீனிவாசன், முத்துக்கிருஷ்ணன், நிர்மல் ஆகியோர் 4க்கு100 தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர்கள் மீரான் மைதீன், ரூபன், ராகுல், வேணுகோபால் ஆகியோர் 4க்கு400 தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவிகள் ஜூனியர் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் முத்துலெட்சுமி, அருதிகா ஆகியோர் தட்டு எறிதலில் இரண்டாமிடமும், சூப்பர் சீனியர் பிரிவில் அபிஷ் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவி ராஜேஸ்வரி உயரம் மாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றனர். ஜூனியர் பிரிவில் மாணவர் முகமது மீரான் தனிநபர் சாம்பியன் பட்டமும், சூப்பர் சீனியர் பிரிவில் மாணவி அபிஷ் தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான் பாராட்டினார். மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, பால்மதி, இசத்தித்துரை, வெங்கடேஷ், ஆகியோரையும் ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர். 

மாநில தடகளப்போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி தேர்வு

மாநில அளவிலான தடகளப்போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நெல்லை மாவட்ட அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட வர்களுக்கான உயரம் தாண்டுதலில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெங்கடேஷ்குமார் முதலிடம் பெற்றார்.  மேலும் இப்பள்ளி மாணவி ஸ்ருதிகா இரண்டாமிடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் இப்பள்ளி மாணவர் முகம்மது மீரான் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

< 1 ... 11 12 13 14 15 ... 20 >