News

News

பிளஸ் 1 தேர்வு ஆக்ஸ்போர்டு பள்ளி 100 % தேர்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வு எழுதிய 92 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. 600 மதிப்பெண்களுக்கு 563 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும், 545 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேரும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 33 பேரும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மற்றும் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசியரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

எஸ்எஸ்எல்சி.தேர்வு : ஆக்ஸ்போர்டு பள்ளி 100 சத தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

 

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 104 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும்; முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 78 பேரும் பெற்றுள்ளனர்.

 

மேலும் சமூக அறிவியல் பாடத்தில் 14 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 99 மதிப்பெண்களை மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மற்றும் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றம் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

செஸ் போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி வெற்றி

கீழப்பாவூரில் நடைபெற்ற ஐபிஎல் செஸ் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்றார். நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் ஐபிஎல் செஸ் அகாடமி சார்பில் ஐபிஎல் செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மஞ்சு இரண்டாமிடம் பெற்றார்.  இவருக்கு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரிசு வழங்கி பாராட்டினார்.வெற்றி பெற்ற மாணவி மஞ்சுவை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக தண்ணீர் தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கி தண்ணீரின் அவசியத்தையும், அதனை சேமிக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார். தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த ஓவியப் போட்டி நடைபெற்றது. ஓவியப் போட்டியில் தீட்டப்பட்ட ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. உலக தண்ணீர் தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், உயிரிகள் உயிர்வாழ தண்ணீரின் அவசிம் பற்றியும் மாணவ, மாணவிகள் பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் உதவி தலைமை யாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

மண்டல தடகளப்போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டி யில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை மாவட்டம் சார்பில் உலகளவில் தடகளப் போட்டியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை தேர்வு செய்யும் வகையில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகம்மது மீரான் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். மேலும் இப்பள்ளி மாணவர் பாரத் 400 மீட்டர் ஓட்டத்திலும், சிவபிரகாசம் 200 மீட்டர் ஓட்டத்திலும், வெங்கடேஷ்குமார் 100 மீட்டர் ஓட்டத்திலும் வெற்றி பெற்றனர். இப்பள்ளி மாணவி சுருதிகா குண்டு எறிதலில் வெற்றி பெற்றார். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.6 ஆயிரம் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன், தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சப்போட்டா பழ தினவிழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சப்போட்டா பழ தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி.வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு பழங்களின் பயன்களை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பழத்தின் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சப்போட்டா பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக சப்போட்டா பழ தின விழா கொண்டா டப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாணவி சுபலெட்சுமி வரவேற்றுப் பேசினார்.சப்போட்டா பழ கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். சப்போட்டா பழத்தின் குணாதிசயங்கள் மற்றும் அவற்றை உண்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் மாணவர் இசைடேனியல் நன்றி கூறினார்.

டேக்வாண்டோ, பேட்மின்டன் போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை

தென்காசியில் நடைபெற்ற டேக்வாண்டோ, பேட்மின்டன்  போட்டிகளில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர். தென்காசி பிஎஸ்எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் டேக்வாண்டோ மற்றும் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி வட்டாரப்ப குதியைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரிச்சர்ட் மெர்வின், பிரனாவ் அஜய் ஆகியோர் தங்கப்பதக்கமும், மாணவி ரியனாமெர்வின் 3 தங்கப்பதக்கமும், மாணவர் அஸ்வின் குமார் வெள்ளிப் பதக்கமும், மாணவர் அச்சுதானந்தன் வெண்கலப் பகத்கமும் பெற்றனர். மேலும் பேட்மின்டன் போட்டியில் ரிச்சர்ட் மெரிவின், ரியனாமெர்வின் ஆகியோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பதக்கங்கள் பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட தேசிய அறிவியல் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீநிதி வரவேற்றுப் பேசினார்.தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் தேன்மொழி, பேச்சியம்மாள்தேவி, புவனேஸ்வரி, பூஜா, மாணவர்கள் ராஜேஷ்குமார், ராகுல், பிரதீப், பிரிசாகமல், சுரேஷ் ஆகியோர் அறிவியலில் சாதனை படைத்த விஞ்ஞானிகள் மற்றும் அவர்கள் கண்டு பிடிப்புகள் பற்றி பேசினர். அறிவியல் மாதிரிகள் பற்றி மாணவிகள் அஷ்விகா, கல்பனாதேவி ஆகியோர் விளக்கினர். சாலை, நீர்நிலை, இருப்புபாதை, வான்வழி உள்ளிட்ட போக்குவரத்துக்கள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறுவது, அலைபேசி அதிர்வலைகளால் பாதிப்பு, இன்டர்நெட் இணைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றம். தூக்கம் இன்மை குறித்த மாதிரிகள் உருவா க்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பற்றி மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மாணவி சரண்யா நன்றி கூறினார்.

< 1 ... 13 14 15 16 17 ... 20 >