News

News

சிந்தனைநாள் பேரணி : சாரண, சாரணியர் பங்கேற்பு

தென்காசியில் சாரண சாரணிய இயக்கம் சார்பில் சிந்தனை நாள் பேரணி நடைபெற்றது. பாரத சாரண சாரணிய இயக்கத் தந்தை பேடன் பவலாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசியில் சாரண, சாரணீயர்கள் கலந்து கொண்ட சிந்தனை நாள் பேரணி நடைபெற்றது. ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பேரணி தொடங்கியது. மாவட்ட முதன்மை ஆணையரும் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலருமான ரதிபாய் தலைமை தாங்கினார். குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் திருமலை, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மேலகரம் சீனிவாசன், தென்காசி செந்தூர்பாண்டி, ராமர், சாஸ்திரி, வைகை ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகி வைகைகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேரணியை தென்காசி டி.எஸ்.பி.,மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், டிராபிக் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பாரத ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மது ஒழிப்பு, போதைப்பொருட்களை தவிர்த்தல், செயற்கை உணவுகளை தவிர்த்தல், சாலை போக்குவரத்து விதிமுறைகளை மதித்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சாரண, சாரணீயர்கள் கைகளில் ஏந்திச் சென்றனர்.பேரணியில் தென்காசி கல்வி மாவட்ட அரசு மேல்நிலை, உயர்நிலை, மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளைச் சேர்ந்த சாரண, சாரணீயர்கள், சாரண ஆசிரியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்றது.ஏற்பாடுகளை சாரண, சாரணிய இயக்க மாவட்டச் செயலாளர் நேருராஜா, மாவட்ட ஆணையர்கள் இவாஞ்சலின் டேவிட், திவான் பக்கீர், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் சுரேஷ்குமார், பொன்னம்மாள், மாவட்ட பயிற்சி ஆணையர்கள் தெட்சி ணாமூர்த்தி, தெரஸ் விஜயராணி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஷ்வரன் நன்றி கூறினார்.

உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி

பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். பாவூர்சத்திரம் சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி கல்வி மாவட்ட அளவிலான 2017-18 உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தென்காசி கல்வி மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்; சிவப்பிரகாசம், முகம்மது மீரான் ஆகியோர் 200 மீ ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் பாரத் 400 மீ ஓட்டத்தில் முதலிடமும், வெங்கடேஷ்குமார் 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் நவீன்வேலாயுதம், மாணவி காசிம்சுல்தானா ஆகியோர் 100 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர். மேலும் மாணவி ஸ்ருதிகா குண்டு எறிதலில் முதலிடமும், மாணவர் ஆகாஷ் மூன்றாமிடமும், மாணவர் ஹரிவெங்கடேஸ் உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்கள் மண்டல அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

மதுரையில் மாநில தடகளப்போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான இந்தியன் ஸ்பீடு ஸ்டார் 2017-18 தடகளப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவப்பிரகாசம், முகம்மது மீரான் ஆகியோர் 200 மீ ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.  இவர்களுக்கு சான்றிதழ் வழக்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் வெள்ளரிக்காய் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளரிக்காய் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளரிக்காய் பயன்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளரிக்காய் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்து வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பேசினார். பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி பிரதிக்ஷா வரவேற்றுப் பேசினார்.  தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் வெள்ளரிக்காய் மருத்துவ குணங்கள் பற்றி பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் வெள்ளரிக்காய் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திரளான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். மாணவி லயோலாலவ்லின் லிசா நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட இந்தியாவின் திறமையான தடகள வீரர்களுக்கான கோடை ஒலிம்பிக் 2020-2024 போட்டிக்கு வெற்றியை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட அளவிலான தேர்வு போட்டி பாளையங்கோ ட்டை அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  இதில் 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிவபிரகாசம், முகம்மது மீரான், ஜோதிபாலன், பாரத், நவீன் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இவர்களில் சிவபிரகாசம், முகம்மது மீரான் ஆகிய இருவரும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை யாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி நதிராபாத்திமா வரவேற்றுப் பேசினார்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அஜ்மல் அசோசியேட் பாலசெந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.  தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் சரபினா, சௌமியா ஆகியோர் இந்திய குடியரசு என்ற தலைப்பில் பேசினர். மாணவி சுபசினி குடியரசு தின கவிதை வாசித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவிகள் ஜெரிஷ் ஜெரோன்ரோஸ், நபிசாத்துல் ஷஜிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவர் அஜய்குமார் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் கலப்பு தானிய உணவு தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலப்பு தானிய உணவு தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி.வகுப்பு மாணவ, மாணவிகள் தானியங்களின் பயன்களை அறிந்து கொள்ளும் வகையில் கலப்பு தானிய உணவு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கி தானிய உணவுகளின் பயன்களைப் பற்றி விளக்கினார். பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சுபலெட்சுமி வரவேற்றுப் பேசினார்.  அனைத்து வகையான தானியங்களில் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்ட தானிய உணவுகள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் கலப்பு தானிய உணவு வகைகள் என்ற தலைப்பில் பேசினர். முடிவில் மாணவர் பிரவீன் நன்றி கூறினார்.

கரம் யோக்கத்தான் மாரத்தான் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் முதலிடம்

கோடகநல்லூரில் நடைபெற்ற கரம் யோகத்தான் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார். நெல்லை அருகே கோடகநல்லூரில் கரம் யோகத்தான் மாரத்தான் போட்டி நடைபெற்றது. யோக் டிரஸ் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார்.  இவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசினை சேரன்மகாதேவி சப்.கலெக்டர் ஆகஸ் வழங்கி பாராட்டினார்.வெற்றி பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

< 1 ... 14 15 16 17 18 ... 20 >