News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் அன்னாசிப்பழ தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அன்னாசிப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பழங்கள், காய்கறிகள், பூக்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் விழாக்கள் ண்டாடப்பட்டு வருகிறது. அன்னாசிப் பழம் பற்றி கே.ஜி.மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அன்னாசிப் பழ தின விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் கணேசன், உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவர் ஜென்ஸி வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை ஆகியோர் அன்னாசிப் பழத்தின் தன்மைகள், அதனை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பேசினர்.  அன்னாசிப்பழத்தின் பெருமையை விளக்கும் வகையில் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அன்னாசிப்பழ கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.நிகழ்ச்சிகளை மாணவர் சற்குருசாஷன் தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவர் சஞ்சைவேல் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குழந்தைகள்தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாள் விழா குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாணவி சுபாஷினி வரவேற்றுப் பேசினார்.மாணவர்கள் செந்தூர் ஆறுமுகனார், ஆர்கேஷ், மாணவிகள் ஜனவர்ஷினி, பவதாரணி ஆகியோர் இறைவணக்கம் பாடினர்.   தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் நித்யகல்யாணி, ஸ்ரீநிதி ஆகியோர் நேருவின் வாழ்க்கை வரலாறு பற்றியும், குழந்தைகள் தினம் கொண்டாடுவது பற்றியும் பேசினர். மாணவிகள் ஷபினா, முருகசந்தியா, அமிஷா, காசிம் சுல்தானா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகம், செய்கை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிகளை மாணவர்கள் சுபாஷ சந்திரபோஸ், கவின், மாணவிகள் சௌமியா, பூஜாஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி சாஹானா நன்றி கூறினார்.

மாநில டேக்வாண்டோ போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் வெற்றி

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். 

          தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி திண்டுக்கல் ஓமலூரில் நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.இப்போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் லியோன் 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இம்மாணவருக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை யாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், பயிற்சியாளர் செல்வன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலைபாதுகாப்பு மற்றும் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி காவல்துறை சார்பில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு மற்றும் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி காசிவிசுவநாதர் கோவில் முன்பு பேரணியை டி.எஸ்.பி., மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை வரவேற்றுப் பேசினார். பேரணி கீழ ரதவீதி, தெற்குமாசி வீதி, பழைய பஸ்ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே ரோடு, மேம்பாலம் வழியாக சென்று எம்.கே.வி.கே.பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் சாலை விதிகளை மதிப்போம்!, புகை நமக்கு பகை, போதை பொருட்களை தடை செய்வோம், மது இல்லா உலகை படைப்போம், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசாதீர் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும் சாலை விதிமுறைகள், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். பேரணியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, தென்காசி வீரமாமுனிவர் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி, செவன்த் டே பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், ஊர்க்காவல்படை வீரர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆக்ஸ்போர்டு பள்ளி நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.இதன் பின்னர் எம்.கே.வி.கே.பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.  சாலைபாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, மது ஒழிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.எஸ்.பி., மணிகண்டன் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, நகராட்சி சுகாதார அதிகாரி ஹக்கீம் மற்றும் பலர் பேசினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் தமிழ் மன்ற விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்மன்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சண்முகப்பிரியா வரவேற்றுப் பேசினார்.தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாணவிகள் ஜனவர்ஷினி, நிதிஷ் நாட்டுப்புறப் பாடல்கள் பாடினர்.  நித்யகல்யாணி, திவ்ய தர்ஷனா, கவின் காட்மியல் ஆகியோரின் நாடகமும், ஸ்ரீமதி, சீதாலெட்சுமி, சக்தி துளசி, மாரியம்மாள், சரவணசுவேதா, சௌமியா, சுபஸ்ரீ, முகிலரசி, காவியா ஆகியோரின் நடனமும் நடைபெற்றது. ஜனவர்ஷினி, நிதிஷ், நரேன் கிருஷ்ண பெருமாள், ராஜஹரிகர சுதன், சித்தார்த் ஆகியோரின் வில்லிசைக் கச்சேரி நடைபெற்றது. மேலும் விடுகதை, நகைச்சுவை, கதை கூறுதலும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவர்கள் சுபாஷ் சந்திரபோஸ், கவின், ஹரிஷ் கார்த்திக் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி ஜனவர்ஷினி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் பப்பாளிப்பழ தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பப்பாளிப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாம் உண்ணும் பழங்களின் பயன்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பழங்கள் தின விழா தனித்தனியே கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் பப்பாளிப் பழத்தின் பயன்களை தெரிந்து கொள்ளும் வகையில் பப்பாளிப்பழ தின விழா கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி காசிரா வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவி யோகேஸ்வரி, மாணவர் நிதிஷ் ஆகியோர் பப்பாளிப் பழத்தின் பயன்கள் மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றி பேசினர். மாணவர் மகாதேஷ் செல்வா பப்பாளிப்பழத்தின் வரலாறு பற்றி பேசினார். மாணவிகள் மேகலா, அற்புத ரிஷ்வினா, வர்ஷினி, உமாமகேஸ்வரி, ரம்யா ஆகியோர் பப்பாளிப்பழ பாடல்களை பாடினர். மாணவிகள் கிருஷ்ணபிரியா, கரிஷ்மராம்ஸ்ரீ, அகல்யாஸ்ரீ, சுபஸ்ரீவர்ஷா, அப்ர்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை பிரியலெட்சுமி, இளமுகில் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பப்பாளிப்பழத்தினால் செய்யப்பட்ட பல்வேறு உருவங்கள் மற்றும் எழுத்துக்களின் கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளானோர் கண்டு ரசித்தனர். முடிவில் மாணவர் சந்தோஷ் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக வாழ்நாள் விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக வாழ்நாள் விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக வாழ்நாள் விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஷிவானி வரவேற்றுப் பேசினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, இயற்கையை பேணுதல், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவி மதுமிதா ஆகியோர் பேசினர்.  மாணவர்கள் வசந்தராஜா, சஞ்சை, ஸ்ரீராம்,  சுபாஷ் வசந்தனர், இளவரசு, சக்திநவீன், கோபாலகிருஷ்ணன், உதய இசை, சங்கரமகாலிங்கம் ஆகியோர் நாம் இயற்கையை பாதுகாத்தால் நம்மை இயற்கை வாழ வைக்கும் என்ற கருத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.சுற்றுச்சூழலை பாதுகாப்போம், சுகாதாரத்தை பேணுவோம், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவி சண்முகப்பிரியா நன்றி கூறினார்.

காந்தி – சத்தியமூர்த்தி நினைவு பேச்சுப் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிகள் வெற்றி

தென்காசியில் நடைபெற்ற காந்தி-சத்தியமூர்த்தி நினைவு பேச்சுப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். தென்காசி காந்தி-சத்தியமூர்த்தி நினைவு விழாக்குழு சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. தென்காசி மலர் ஐ.டி.ஐ.வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு சுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆரம்பப் பள்ளி அளவில் காந்தியடிகள் என்ற தலைப்பில் பேசிய தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கார்த்திகா முதலிடம் பெற்றார். மேலும் நடுநிலைப் பள்ளி அளவில் சுதந்திரப்போராட்டம் என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி ~ரபினாவும்,  உயர்நிலைப் பள்ளி அளவில் தீண்டாமை என்ற தலைப்பில் இப்பள்ளி மாணவி சண்முகப்பிரியாவும், பாதர் ஆப் அவர் நேசன் என்ற தலைப்பில் பேசிய இப்பள்ளி மாணவி மகேஸ்வரியும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

< 1 ... 15 16 17 18 19 20 >