News

News

ஆக்ஸ்போர்டு பள்ளிக்கு வந்த இயக்குநர் : பொதுதேர்வு குறித்த பயிற்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத் தேர்வினை எதிர்கொள்வது குறித்த புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார். திரைப்பட இயக்குநர் அமீர் அப்பாஸ் அமைதியான படிப்பு, எளிதில் பொதுத்தேர்வினை எதிர்கொள்வது, மன அழுத்தத்தை குறைப்பது, மாணவர்களின் கடமை, நல்ஒழுக்கம், எளியவர்களிடம் கருணை காட்டுவது, பிறரிடம் அன்பு காட்டுவது, சமூக சேவை, உள்ளிட்டவைகள் குறித்து பேசி மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தார்.மேலும் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமீர் அப்பாஸ் பதில் அளித்தார். முகாமில் மாணவ, மாணவிகளுடன் ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

இறகுப் பந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் வெற்றி

நெல்லையில் நடைபெற்ற மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை விங்ஸ் உள் விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மூத்தோர் பிரிவிற்கான இறகுப் பந்துப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் நவீன் வெற்றி பெற்றார்.  இவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர் நவீனை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் மாதுளம் பழ தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாதுளம் பழ தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாதுளம்பழத்தின் பெருமையை விளக்கும் வகையில் மாதுளம் பழ தின விழா நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் மாதுளம் பழத்தின் விதைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி காயத்ரி வரவேற்றுப் பேசினார்.மாணவிகள் ஜெசிகா, தேவி ஆகியோர் இறை வணக்கம் பாடினர்.  மாணவி சுகாசினி அறிமுக உரையாற்றினார். மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் அதன் மருத்துவ பயன் குறித்து தலைமை யாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் பேசினர். மாதுளம்பழத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பாடல், நடனம், கவிதை வாசித்தல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிகளை  மாணவர் முகம்மது யூனுஸ், மாணவி ஜென்ஸிய பாத்திமா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.  முடிவில் மாணவி கபிலா நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் ஆசிரியர் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ரேணுகா வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் ஜீவரத்தினம் இறை வணக்கம் பாடினார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சரண்யா வரவேற்பு நடனம் ஆடினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், ஆசிரியைகள் ராணி, முருகேஸ்வரி, சித்ரா, வனிதா ஆகியோர் ஆசிரியர் தின உரையாற்றினர். ஆசிரியைகள் பங்கேற்ற நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, துணுக்குகள் கூறுதல், சிரிப்போ சிரிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் சௌமியா, பாலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் ஆசிரியை பேபி நன்றி கூறினார்.

மண்டல டேக்வாண்டோ போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார். நெல்லை மாவட்டம் பாளை., அண்ணா விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் லியோன் 48 முதல் 52 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்றார். இவர் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்பள்ளி மாணவர் லிமான் 41 முதல் 44 கிலோ எடைபிரிவிலும், மாணவர் ஹரீஸ் முத்துராம் 56 முதல் 60 கிலோ எடை பிரிவிலும், மாணவர் கிஷோர் ஸ்டாலின் 52 முதல் 56 கிலோ எடை பிரிவிலும், மாணவர் உதய இசக்கி 38 முதல் 41 கிலோ எடை பிரிவிலும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தென் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் : ஆக்ஸ்போர்டு பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்

தென்காசியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் தென்மாவட்ட அளவில் பள்ளி மாணவ. மாணவிகளுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் ஆக்ஸ்போர்டுமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. தென்காசி ஸ்ரீநல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கு ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் முருகன், ஸ்ரீநல்லமணி வித்யாலயா சார்பில் ரவி, போட்டி ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ், கிங்ரைசர் நிறுவனர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் குங்பூ ராம்ராஜ் வரவேற்று பேசினார். போட்டிகளை கடையநல்லூர் இண்டர்நேசனல் பள்ளியின் தாளாளர் முகம்மது ஹபீப் துவக்கி வைத்தார்.போட்டியில் ஒட்டுமொத்த குழுநபர் போட்டியில் ஸ்டெப்டூமெண்டில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், ரேசில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியும் பெற்று சாதனை படைத்தது. சாம்பியன் முதலிடத்தை பணகுடி செண்டஆண்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடத்தை கடையநல்லூர் சக்ஸஸ் பள்ளியும், மூன்றாம் இடத்தை மதுரை நேசனல் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் கொடிக்குறிச்சி யு.எஸ்.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தென்காசி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களின் சேர்மன் மணிமாறன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.  மாவட்ட கல்வியாளர் மாரிமுத்துசாமி, பள்ளியின் முதல்வர் மாரிமுத்து, பயிற்சியாளர்கள் காமராஜ், சரவணன், முத்துரத்தினம், ரமாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் பெரியதுரை நன்றி கூறினார். ஓட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்ததது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார் தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசியரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார். உலக மக்களின் பாதுகாப்பு, இந்திய தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மாணவ, மாணவிகள் பேசினர்.  மேலும் ராணுவ சீருடை, காவல்துறை சீருடை அணிந்து மாணவ, மாணவிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியா உலக வல்லரசாக திகழ ஒவ்வொரு இந்தியனும் பாடுபடுவோம் என்ற உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் வீர, தீர செயல்கள் புரிந்த நமது இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினரின் சிறப்புகள் பற்றி விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

பாவூர்சத்திரத்தில் மாவட்டஅளவிலான ஓட்டப்பந்தயம் : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் வெற்றி

பாவூர்சத்திரத்தில் நடந்த கல்வி மாவட்ட 100 மீ ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் தென்காசி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவிற்கான 100 மீ ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகம்மது மீரான் வெற்றி பெற்றார்.  இவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவரை தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை, ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

< 1 ... 15 16 17 18 19 20 >