News

News

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் சுரேந்திர சக்திக்கு ஆட்சியர் பரிசு

இந்திய மருத்துவ ஓமியோபதி சார்பில் நடைபெற்ற யோகா போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் சுரேந்திர சக்தி வெற்றி பெற்றார்.

தென்காசி ஐ. சி. ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை சார்பாக நடந்த யோகா போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும்
பங்கேற்றனர்.

இதில் யோகா போட்டியில் இப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் சுரேந்திர சக்தி வெற்றி பெற்றார். 

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை சார்பில் நடைபெற்ற 6வது சித்த மருத்துவ திருநாள் விழாவில் மாணவர் சுரேந்திர சக்திக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ், எம். பி., தனுஷ்;           எம். குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு. கபீர், நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

வெற்றி பெற்ற மாணவர் சுரேந்திர சக்திக்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான     கே. திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான    
தி. மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினர்.
 

மாநில டேக்வாண்டோ போட்டிக்கு ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் கள் தேர்வு

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்

தேர்வு செய்யப்பட்டனர்.

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான

டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி தென்காசி ஐ. சி. ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் நித்திஷ் கிருஷ்ணன் முதலிடமும், அம்மார் ரஹீம் மூன்றாமிடமும், மூத்தோர் பிரிவில் விஷ்ணுராஜ் முதலிடமும்,

பால அபிசேக்குமார் மூன்றாமிடமும், மிக மூத்தோர் பிரிவில் ஆதிசிவ சாய்ராம், முப்புடாதி, சுப்பிரமணியன், பிறை முத்துக்குமார், சாகுல்கமீது, ஹரீஸ் ஆகியோர் முதலிடமும், முகமது இம்ரான் மூன்றாமிடமும் பெற்றனர்.

மூத்தோர் பிரிவில் இப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் ரீனா வைரஜோதி, சலெட்ஸ்னோபியா, ராஜலெட்சுமி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான 
கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான 
தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன்,

உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், பால்மதி, ராமர், மணிகண்டன், பாண்டிதுரை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டி: ஆக்ஸ்போர்டு பள்ளி அறிவியல் மாதிரி தேர்வு

நெல்லையில் நடைபெற்ற 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இடம்பெற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மாதிரிகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தென்காசி, நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், மாவட்ட அறிவியல் மையம், சமூக ரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி
ஆகியவை இணைந்து நடத்திய நெல்லை அறிவியல் மையத்தில் நேற்று 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் "ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது” என்ற தலைப்பில் அறிவியல் மாதிரிகள் படைக்கும் போட்டிகள் நடைபெற்றது. 

இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி
குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என்.சபரீஸ்,ஆர். திவாகர் ஆகியோர் “மின்சார அதிர்ச்சியில் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்கும் சாதனம்” என்ற தலைப்பில் உருவாக்கிய அறிவியல் மாதிரியும்,

இதே பள்ளி மாணவர்கள் சி. தயா விக்ரம், மாதேவிஷ்; ஆகியோர் உருவாக்கிய 'மாற்றுத்திறனாளிகளுக்கான தானியங்கி சுற்றுச்சூழல் குப்பைத் தொட்டி' மாதிரியும் தேர்வு செய்யப்பட்டது.

இம்மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் அறிவியல் மாதிரிகளை அறிமுகம் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்ட ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான 
கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான 
தி. மிராக்ளின் பால்சுசி,
தலைமையாசிரியை குழந்தைதெரசா, உதவி
தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

மாநில யோகா போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி

குற்றாலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் சன் யோகா ஹெல்த் கேர் அசோசியேசன் சார்பில் தமிழ்நாடு யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்-2022 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீசக்தி, போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் சோனிஸ்ரீ, ஆல்பர்ட் ஜெய்சன், மதன்குமார், நதிமா, ராஜேஷ்; ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இப்பள்ளியைச் சேர்ந்த சன்ஜனா, வேதா, ஹரிணி, மதுகிஷரா, மகாலட்சுமி, சிவ சக்திவேல் ஆகியோர் இரண்டாமிடமும், அமுதஸ், சுககார்த்திகா, யோஷத், மாதவன் ஆகியோர் மூன்றாமிடமும், வெற்றிவேல் முருகன், முத்துலட்சுமி ஆகியோர் சிறப்பிடமும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான      கே. திருமலை,  பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி, வழக்கறிஞருமான       தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் குழந்தைகள் தின

விழா கொண்டாடப்பட்டது.

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள்

தென்காசி குத்துக்கல்;வலசை ஆக்ஸ்போர்டு பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழா குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால்சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா, வரவேற்று

பேசினார்.

முன்னாள் பிரதமர் நேரு போன்று வேடமணிந்த மாணவ, மாணவிகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்தியாவை உருவாக்கிய சிற்பி, நேரு மாமா, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.

இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உட்பட திரளானோர் கலந்து 
கொண்டனர். 
முடிவில் பள்ளி உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் மாணவ, மாணவிகள் நேரு

வேடமணிந்து வந்தனர். பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
அவற்றில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
 

தென்காசி மாவட்ட தடகளப் போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

தென்காசி மாவட்ட அளவிலான தடகளப்

போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

தென்காசி மாவட்ட அளவிலான தடகளப்

போட்டிகள் தென்காசி ஐ. சி. ஐ. அரசு ஆண்கள்

மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் 400 மீ, 800 மீ, 1500மீ ஓட்டங்களில்

முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

இம்மாணவர் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆண்கள் மூத்தோர் பிரிவு போட்டிகளில் இப்பள்ளி மாணவர் மதீஸ் 800 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும்,
1500 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் சுரேஷ் குண்டு எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.

ஆண்கள் இளையோர் பிரிவு போட்டிகளில்

இப்பள்ளி மாணவர் முகம்மது உவேஷ் 200 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், பிரசன்னா 600 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், மதன்ராஜ் குண்டு எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.

பெண்கள் இளையோர் பிரிவில் இப்பள்ளி மாணவி மாணிக்கஸ்ரீ 200 மீ ஓட்டத்தில் முதலிடமும், 400 மீ, 600 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றார். இம்மாணவி பெண்கள் இளையோர் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முதன் இரண்டு இடங்கள் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தகு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை

ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை,

பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால்சுசி,

பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், பால்மதி, ராமர், மணிகண்டன், பாண்டித்துரை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பெற்றோர்கள் பாராட்டினர்.

தென்காசி மாவட்ட தடகளப் போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் சாம்பியன்

தென்காசி மாவட்ட தடகளப் போட்டிகளில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஷ் சாம்பியன் பட்டம் பெற்று மாநில தடகள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

 

தென்காசி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

 

இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்ட   ஆண்கள் பிரிவில் 2000ம் மீட்டர் ஓட்ட போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.மதீஷ் முதலிடம் பெற்றார். மேலும் 800 மீட்டர் ஓட்டத்திலும் இம்மாணவர் முதலிடம் பெற்றார். தடகளப் போட்டிகளில் மாணவர் ஆர்.மதீஷ் சாம்பியன் பட்டம் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இம்மாணவருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை தென்காசி மாவட்ட தடகள சங்க தலைவர் ஆலடி ஆ.எழில்வாணன், செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான ச.செல்லப்பாண்டியன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

 

 சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர் மதீஷை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற  வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாநில வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் அசத்தல்

மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் தென்காசி  ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தங்கப் பதக்கம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

 

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் வில்வித்தை சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி  நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ராகவேந்திரன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று வில்வித்தை சாம்பியன் பட்டத்தை பெற்றார். 

 

இம்மாணவர் தேசிய அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் ராகவேந்திரனை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

< 1 2 3 4 5 6 ... 20 >