தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி முருகஸ்ரீ வரவேற்றுப் பேசினார். தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள், நாம் பெற்ற சுதந்திரம், சுதந்திர இந்தியா உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர். தேசப் பற்றை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை பரிசு வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாணவி ஆர்னிகா நன்றி கூறினார்.