தென்காசி குறுவட்ட அளவிலான தடகள்
விளையாட்டுப் போட்டிகள் தென்காசி இ. சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டிகளில்
தென்காசி குறுவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து
கொண்டனர்.
இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான இளையோர் பிரிவிற்கான போட்டிகளில் இப்பள்ளி மாணவர் முகம்மது உசேன் 200மீ ஓட்டத்தில் முதலிடமும், 100மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், 4க்கு 100மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் பிரசன்னா 600 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும்,
மாணவர் நித்திஸ் கிருஷ்ணன் உயரம்
தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவர் மதன்ராஜ் குண்டு எறிதலில் இரண்டாமிடமும், வட்டு எறிதலில் மூன்றாமிடமும், மாணவர் சந்தோஷ் 800மீ தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் கவீஸ் தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர். மூத்தோர் பிரிவிர் இப்பள்ளி மாணவர் மதீஸ் 1500மீ ஓட்டத்தில் முதலிடமும், 800மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், 400மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர் ராமசெல்வம் உயரம் தாண்டுதலில் முதலிடமும்,
மாணவர் சுரேஷ் குண்டு எறிதலில் முதலிடமும், மாணவர்கள் அசிம் முஸ்தபா, மதீஸ், ஸ்ரீராம் கோகுல், ராஜ ஹரிஹரசுதன் ஆகியொர் தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றனர்.
மிக மூத்தோர் பிரிவில் மாணவர் பாரத் 1500மீ, 800மீ, 400மீ ஓட்டங்களில் முதலிடமும், மாணவர் வெங்கடேஷ்குமார் உயரம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவர் சந்தீப் பிஸ்வாஸ் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்றனர்.
மாணவிகளுக்கான இளையோர் பிரிவில் இப்பள்ளி மாணவி மாணிக்க ஸ்ரீ 800மீ, 400மீ, ஓட்டங்களில் முதலிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும்,
மாணவி ரியானா மெர்லின் தடைதாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவி காவியா உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவி சௌமியா குண்டு எறிதல், வட்டு எறிதலில் இரண்டாமிடமும்,
மாணவி கௌசிகா 400மீ ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவி சிமோனா செஜிகா உயரம் தாண்டதல், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.
மூத்தோர் பிரிவில் இப்பள்ளி மாணவி அமிர்தா 3000மீ ஓட்டத்தில் முதலிடமும், அதே போட்டியில் மாணவி ரீனா வைரஜோதி இரண்டாமிடமும், மாணவி கார்த்திகா நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவி கஜ உதயா உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.
மிக மூத்தோர் பிரிவில் மாணவி சித்தரஞ்சனி குண்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்றார். மாணவிகளுக்கான இளையோர் பிரிவில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மாணிக்க ஸ்ரீ தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
மாணவர்களுக்கான மிக மூத்தோர் பிரிவில் இப்பள்ளி மாணவர் பாரத் தனி நபர் சாம்பின் பட்டம் பெற்றார். முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை
ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் க. சுப்பம்மாள். நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன். உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், பால்மதி, சதீஷ்குமார், ராமர், மணிகண்டன், பாண்டிதுரை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.