News

News

தென்காசி கல்வி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 101 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவர் இரா. அஜய்குமார் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-95, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-100, கணிதம்-100.
இப்பள்ளி மாணவி பெ. சுபாஷினி 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்-96, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-99, கணிதம்-100.

இப்பள்ளி மாணவி சை. லத்திபா இஹ்ஸானா 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-94, பொருளியல்-100, வணிகவியல்-100, கணக்கியல்-100, வணிக கணிதம்-95. இப்பள்ளியில்  வேதியியலில் 4 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், கணிதத்தில் 2 பேரும், கணக்கியலில் 4 பேரும், வணிகவியலில் 3 பேரும், பொருளியலில் ஒருவரும், வணிக கணிதத்தில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சாதனைபடைத்த மற்றம் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டக்கல்லூரி பேராசிரியர் முனைவர் எம். இ. டி. முகமது, பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் கள் சுற்றுச்சூழல் விழப்புணர்வு பேரணி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகள் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி புதிய பஸ்ஸ்டாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியையும், மரக்கன்றுகள் வழங்கும் பணியையும் துவக்கி வைத்தார்.

பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தேவையான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் எடுத்துக் கொண்டனர்.

கலைஞர் பிறந்தநாள் விழா போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி

தென்காசி வ. உ. சி. வட்டார நூலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தென்காசி வ. உ. சி. வட்டார நூலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியப் போட்டியில் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி 5ம் வகுப்பு மாணவி க. அக்ஷ்ய ஸ்ரீ முதலிடம் பெற்றார். கட்டுரைப் போட்டியில் இப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி ச. அமிர்தவர்ஷினி மூன்றாமிடம் பெற்றார்.

பேச்சுப் போட்டியில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி வெ. செல்வதாரணி முதலிடம் பெற்றார். ஓவியப் போட்டியில் இப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் பி. நடராஜன் மூன்றாமிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வ. உ. சி. வட்டார நூலகம் சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மழலையர் பட்டமளிப்பு விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார்.

ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி முன்னிலை வகித்தார். தாமிரயாழினி,  சுபிக்ஷா ஸ்ரீ, கவின்ராஜ், பிரதிக்பால் ஆகியோர் இறைவணக்க பாடல் பாடினர். மாணவி நசினி வரவேற்று பேசினார்.

பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தி பேசினர்.

மாணவர் அஜ்மல் இந்தி உரையாற்றினார். யோசித், கார்திக் லாவனிஷ், கவின்ராஜ், அபினர், சர்மினி, ஸ்ரீ கிருத்திகா, ஸ்ரீ சக்தி,  சுபிக்ஷா ஸ்ரீ, ராஜலலிதா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளை கவிமித்ரா, அபிஷேக்ராம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

முடிவில் மாணவி ஸ்ரீ நர்சினி நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் புத்தக திருவிழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக திருவிழா நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புத்தக திருவிழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்து உலக புத்தக தினம் பற்றி சிறப்புரையாற்றினார்.

புத்தக கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான தமிழ், ஆங்கில புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற புத்தக கண்காட்சியினை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

புத்தகத் திருவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை பரிசு வழங்கி பாராட்டினார்.    மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் தீ தொண்டு வார விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழா கொண்டாடப்பட்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் தென்காசி மாவட்ட அலுவலர் கவிதா தீ விபத்தை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள் பற்றி விளக்கினார்.

கூடுமானவரை எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கீற்று போன்ற கூரை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். தீ பிடிக்காத ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், டின் தகரம் போன்ற பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். சமையல் முடிந்ததும் அடுப்பினை கவனத்துடன் முழுவதுமான அணைத்து விட வேண்டும். சமையல் வேலையின் இடையே அடுப்பினை எரிய விட்டு விட்டு வெளியே செல்ல வேண்டாம். வேறு நபர் இல்லாவிட்டால் அடுப்பினை அணைத்துவிட்டு வெளியே செல்ல வேண்டும். ஸ்டவ் எரிந்து கொண்டிருக்கும் போது மண்ணெண்ணெய் ஊற்றக் கூடாது. ஸ்டவ்வை அணைத்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்ற வேண்டும். நெருப்புடன் கூடிய சாம்பலை குப்பையில் கொட்ட கூடாது.

மின் வயர்களை பயன்படுத்தும் போது இணைப்புகளை இன்சுலேட் டேப்பினால் பாதுகாப்பாக சுற்ற வேண்டும். குடிசைப் பகுதிகளின் அருகில் வைக்கோல் போர்களை அமைக்க வேண்டாம்.

சிலிண்டரில் இருந்துஅடுப்புக்குச் செல்லும் டியூப்பை அடிக்கடி செக்கப் செய்து தரமான கம்பெனி டியூப்பை பொருத்தவும். கேஸ் லீக்கேஜ் ஏற்படும் போது மின்சார சுவிட்சுகளை உபயோகப்படுத்தக் கூடாது.

ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். மேலும் சிலிண்டரை திறந்த வெளியில் வைக்க வேண்டும். திருவிழா மற்றும் விசேஷ காலத்தில் கூரையைப் பயன்படுத்தாமல் தகர ஷீட் பயன்படுத்த வேண்டும்.

விழாக்கலங்களில் வாண வேடிக்கையைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் அலுவலர் கவிதா மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், தென்காசி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் ரமேஷ், நிலைய வீரர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். மாணவி நிரல்யாதேவி வரவேற்றார்.

மாணவர்கள் கமலேசன், தன்விக், சாய் விஜய், ரெயான் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

மாணவர்கள் சுகில், ஹர்ஷிகா அபிஷாதேவி, சுபபொன் லெட்சுமி, ரெய்ஃபா ஆகியோர் பள்ளியின் சிறப்பு குறித்து பேசினர்.

தொடர்ந்து மாணவ மாணவிகளின் நடனம் விளையாட்டு போட்டிகள், பெற்றோர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளியின் சட்ட ஆலோசகர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குனர் வக்கீல் மிராக்ளின்பால் சுசி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

மாணவர் சாய்சக்தி மாறன் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் 2வது தடுப்பூசி முகாம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு 2வது தடுப்பூசி போடும் முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி ,
வட்டார சுகாதார ஆய்வாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அனுசுயா தலைமையில் சகுந்தலாதேவி, சுமதி, பாக்கியலெட்சுமி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து 2வது கொரோனா தடுப்பூசி போட்டனர்.

< 1 2 3 4 5 6 ... 20 >