News

News

ஆக்ஸ்போர்டு பள்ளிகளில் குடியரசு தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி ஆகியவை சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி முன்னிலை வகித்தார்.

பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார்.

விழாவில் பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டக்கல்வி அலுவலருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர் வாழ்த்து

தென்காசி மாவட்டக் கல்வி அலுவராக சங்கீதா சின்னராணி நியமிக்கப்பட்டார். இவர் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வந்து மாவட்டக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய மாவட்டக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணியை தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சிறார் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் கோவிட் -19 தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு (15 வயது முதல் 18 வயது வரை)  சிறார் கோவிட் 19  தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

டாக்டர் இந்துமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு ஆகியோர் தலைமையில்  மருந்தாளுநர் முகம்மது தாரிஹ், செவிலியர்கள் பேச்சியம்மாள், பார்வதி, கலைச்செல்வி, எம்டிஎம் ஊழியர் வனஜா ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு சிறார் கோவிட் -19 தடுப்பூசிகளை போட்டனர்.

முகாமில் முதற்கட்டமாக 260க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முடிவில் நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.

தென்காசி அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாழ்த்து

தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக தென்காசி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  


இதற்கான நியமன உத்தரவினை  மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் வழக்கறிஞர் முருகனிடம் வழங்கினார்.  


வழக்கறிஞர் முருகனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞரும்,

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சட்ட ஆலோசகருமான திருமலை பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் சக வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர் கள், அரசியல் கட்சியினர்,
முக்கிய பிரமுகர்கள் சந்தித்து அரசு வழக்கறிஞர் முருகனுக்கு தெரிவித்தனர்.

அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்ற ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள்

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய அறிவியல் இன்ஸ்பயர் விருதுக்கான போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்றனர்.

மத்திய அறிவியல் மற்றும் தொழி;ல்நுட்ப அமைச்சகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் இன்ஸ்பயர் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெய்சுதர்வேல் இணைய தூசிகளை எடுத்துச் செல்லும் தானியங்கி என்ற தலைப்பிலும்,

இப்பள்ளி மாணவர் அசிம் முஸ்தபா கார் விபத்து தடுப்பு என்ற தலைப்பிலும், இப்பள்ளி மாணவி மதுபாலா காலணிகளில் இருந்து மொபைல் சார்ஜிங் என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.

இதில் இவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் சான்றிதழ்களும், ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசும், மாவட்ட அளவிலான  அறிவியல் இன்ஸ்பயர் விருதும் வழங்கப்பட்டன.

அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறி ஞர் தி. மிராக்ளின் பால் சுசி,

பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

மாவட்ட தடகள போட்டிகள் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி

மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 
பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

நெல்லை மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 இப்போட்டிகளில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இப்பள்ளி மாணவர் சிவப்பிரகாசம்  மெட்லி ரிலேயில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும்  பெற்றார்.

இப்பள்ளி மாணவர்கள் பாரத் வ 1, 500 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடமும்,  மெட்லி ரிலேயில் 
முதலிடமும், 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றார்.

14 வயதுக்கு உட்பட்டோர்  
பிரிவில் இப்பள்ளி மாணவர் அசிம் முஸ்தபா 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல் இடம்  பெற்றார்.

மாணவிகள் பிரிவில் இப்பள்ளி மாணவி ரியானா மெர்வின் எறி பந்து போட்டியில் இரண்டாம் இடமும்,   4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும்  பெற்றார். மாணவி மாணிக்கஸ்ரீ 
4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம்  
பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் திண்டுக்கல்லில்  நடைபெற இருக்கும் மாநில அளவிலான தடகள போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை   ஆக்ஸ்போர்டு பள்ளி சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளித் தாளாளரு ம் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தி. மிரக்ளின் பால்சுசி,   

பள்ளி தலைமை ஆசிரியை குழந்தை தெரேசா, உதவி தலைமையாசிரியை முனைவர் க. சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன்,   பால்கன் அத்லெட்டிக் பவுண்டேஷன் செயலாளரும் சர்வதேச தடகள பயிற்சியாளருமான நிகில் சிற்றரசு, உடற்கல்வி ஆசிரியர் செல்வன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார்.

ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.  

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாறுவேடப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா, விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.  

போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் உதவி தலைமையாசிரியை முனைவர் க. சுப்பம்மாள் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக கைகள் கழுவும் தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக கைகள் கழுவும் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 

பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக கைகள் தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை வகித்தார். பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

 

கைகள் கழுவும் முறைகள் குறித்து தென்காசி வட்டார சுகாதார கண்காணிப்பாளர் வேலு, சுகாதார ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.உலக கைகள் கழுவும் தின உறுதிமொழியினை மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

 

கைகள் கழுவும் பழக்கத்தை அன்றாட வாழ்வில் நான் தினமும் கடைப்பிடிப்பேன். தினமும் கைகளை சோப்பு மற்றும் சோப்பு கரைசல் போட்டு ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கழுவுவேன். இதன் மூலம் ஏற்படும் நன்மைகளை எனது நண்பர்களுக்கும், சுற்றத்தாருக்கும் எடுத்துக் கூறுவேன்.

 

உணவு உட்கொள்வதற்கு முன்பும், பின்பும், கழிவறையை உபயோபப்படுத்திய பின்பும், பெறியில் சென்று வீடு திரும்பிய பின்பும் தவறாமல் கைகளை கழுவுவேன். முறையாக கைகளை கழுவுவதன் மூலம் வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, கொரோனா போன்ற சுவாச தொற்று நோய்கள், குடற்புழுக்கள், டைபாய்டு, சீதப்பேதி போன்ற நோய்களை தவிர்க்க முடியும் என்பதை அறிவேன்.

 

குழந்தைகளுக்கு கைகள் கழுவும் முறைகளை தெளிவாக எழுத்துரைப்பதன் மூலம் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு, கல்வியில் முன்னேற்றம் காண முடியும் என்பதை அறிவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

< 1 ... 3 4 5 6 7 ... 20 >