News

News

தென்காசி வ.உ.சி.நூலக போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி வெற்றி

தென்காசி வ. உ. சி. வட்டார நூலகம் நடத்திய மகாத்மாகாந்தி, காமராஜர் பற்றிய கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாண, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

தென்காசி வ. உ. சி. வட்டார நூலம் சார்பில் மகாத்மாகாந்தி, காமராஜர் பற்றிய மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

மகாத்மா காந்தி கட்டுரைப் போட்டியில் இப்பள்ளி மாணவி மு. அஷ்வினி பாலா, மகாத்மாகாந்தி பேச்சுப் போட்டியில் இப்பள்ளி மாணவர் ஜெரிக்சன்,

காமராஜர் ஓவியப் போட்டியில் இப்பள்ளி மாணவி விஷ்ணுபிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை,

ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி,

பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

அபாகஸ் போட்டியில் ஆக்ஸ் போர்டு பள்ளி மாணவி உலக சாதனை

அபாகஸ் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்;ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரினி உலக சாதனை படைத்துள்ளார்.

ஸ்மார்ட் சாய்ஸ் இந்தியன் அபாகஸ் ஃப்ரான்சைஸ், எலைட் உலக சாதனை மற்றும் இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி தனி உலக சாதனை போட்டி நடத்தியது.

இந்த அபாகஸ் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். ஹரினி பங்கேற்றார்.

இவருக்கு 12 நிமிடங்கள் 4 வரிசைகளைக் கொண்ட 12 நிமிடங்களில் 4 வரிசைகளுடன் ஒற்றை இலக்க மன எண் கணித கூட்டுத்தொகை வழங்கப்பட்டது.

இதில் இவர் ஒரு தனி உலக சாதனை படைத்தார். அபாகஸ் போட்டியில் உலக சாதனை படைத்த மாணவி எஸ். ஹரினிக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு ராஜா அபாகஸ் பயிற்சி அளித்தார்.

சாதனைபடைத்த மாணவி எஸ். ஹரினியை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி,

தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுத்தம் உறுதிமொழி ஏற்பு

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சுத்தம் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் அரசின் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றன.

இப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகளில் 50 சதவிகிதம் பேர் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் சோப்பு கொண்டு கை கழுவ வசதிகள் செய்யப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளில் பெஞ்சுக்கு இரண்டு பேர் வீதம் முககவசம் அணிந்து இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டச் சுத்தம் குறித்த உறுதிமொழியை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை வகித்தார்.

பள்ளி சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர்கள் திருமலை, மிராக்ளின் பால் சுசி, நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி வருமாறு, நான் இன்று முதல் கீழ்காணுமாறு உறுதி எடுத்துக் கொள்கிறேன்.   நான்  எனது சுய சுத்த பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் எனது உடல் நலத்தைப் பேணுவேன்.

எனது பள்ளி, வீடு, குடியிருப்பு, பொது இடங்களாக விளையாடுமிடம், பூங்கா, தோட்டம், எனது கிராமம் மற்றும் எனது மாநிலம் ஆகியவற்றின் உள்ளும், புறமும் சுத்தமாக வைத்துக் கொள்வேன்.  
மேலும் குப்பைகளை உரிய குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவேன்.

என்னைச் சுற்றியுள்ள நிலம், நீர் மற்றும் காற்றினைச் சுத்தமாக வைத்திருப்பேன். சிறுநீர் மற்றும் மலம் கழிக்க கழிவறையினை பயன்படுத்துவேன் மற்றும் பயன்பாட்டிற்கு பின்னர் அதனை சுத்தமாக பராமரிப்பேன். கழிவறை பயன்பாட்டிற்குப் பின்னர் சோப்பு கொண்டு எனது கைகளை கழுவுவேன்.  

மேலும் சாப்பிடும் முன்னர் சோப்பு கொண்டு எனது கைகளைக் கழுவுவேன்.  என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே எப்போதும் கழிவறையினைப் பயன்படுத்துதல் மற்றும் சோப்பு கொண்டு கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிப்பேன்.

மகாத்மா காந்தி அவர்களின் கனவான “தூய்மை பாரதம்” என்பதற்கு இதயப் பூர்வமாக என்னை அர்ப்பணித்து எனது செயல்பாடுகள் மூலம் அதனை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைள் குறித்து பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை விளக்கினார்.

மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உட்பட அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடந்து கொண்டனர். இறுதியில் உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தில் 75வது சுதந்திர தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி ஆகியவை சார்பில் நம் நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை வகித்தார். ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் தி. மிராக்ளின் பால்சுசி, முன்னிலை வகித்தார்.

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பேசினர்.

ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகள் விழாவை கண்டு களி;த்தனர். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் சமூகஇடை வெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.

தென்காசியில் பரிசளிப்பு விழா

தமிழ் நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் தேசிய பசுமை படையும் , தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இணைய வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி களை நடத்தியது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு   பரிசளிப்பு விழா தென்காசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அன்புமணி தலைமை தாங்கினார். நல்லாசிரியர்  மாடசாமி, வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் விஜயலக்ஷ்மி வரவேற்றார்.


மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  கருப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டி களில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இணைய போட்டியில் வெற்றிபெற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்வினி பாலாவிற்கு மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கருப்புசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி கல் வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வின் சாமுவேல் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கி அதிலிருந்து வினாடி வினா நடத்தி பரிசு வழங்கினார்.

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய கருத்தாளர் முனைவர் ரெங்கநாதன் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார்,   தங்கபாண்டியன், திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் முனைவர் சந்திர புஷ்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  

தலைமை ஆசிரியரும் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜோசப் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாதவி , சங்கரன்  செய்திருந்தனர்.

+2 தேர்வில் தென்காசி மாவட்டத் தில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி சிவாணி முதலிடம்

பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். சிவாணி முதலிடமும், இதே பள்ளி மாணவி எம். மகாலெட்சுமி மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 99 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

இப்பள்ளி மாணவி எம். சிவாணி 600 மதிப்பெண்களுக்கு 591. 46 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.

இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-98. 95, ஆங்கிலம் -98. 06, இயற்பியல்-98. 88, வேதியியல்-98. 88, உயிரியல்-97. 74, கணிதம்-98. 95.

இப்பள்ளி மாணவி எம். மகாலெட்சுமி 587. 95 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார்.

இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-99. 12, ஆங்கிலம்-97. 12, இயற்பியல்-97. 63, வேதியியல்-97. 91, உயிரியல்-97. 05, கணிதம்-99. 12.

இப்பள்ளி மாணவி வி. மதுமிதா 582. 63 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-98. 40, ஆங்கிலம்-96. 17, இயற்பியல்-96. 55, வேதியியல்-97. 98, உயிரியல்-95. 13,  கணிதம்-98. 40.

சாதனை படைத்த, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்சி) பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி,

தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

மாதிரி ஐ.நா.சபை தூதர்களுக்கான போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி

சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை தூதர்களுக்கான ஆன்லைன் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச அளவில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர்களுக்கான போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்றது.  

இப்போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை குழுவினருடன் இணைந்து பணிபுரிந்தனர். வணிக மேம்பாடு, தலைமைத்துவம், சமூக ஊடக சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு திறன்களை மாணவர்கள் கற்றுக் கொண்டனர்.

சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை ஆன்லைன் மாநாடு 57. 0-இன் நடைபெற்றது. இம்மாநாட்டில் தென் சீன கடல் தகராறு, இனவெளியை எதிர்த்துப் போராடுவது, இனவெறி

மற்றும் தொடர்புடைய சகிப்பின்மை, சுத்தமான நீர் மற்றும் நல்ல சுகாதார பராமரிப்புக்கான சுகாதாரம், தொற்று நோய்களில் மின் கற்றலுக்கான அணுகலை அதிகரித்தல், மேம்படுத்துதல், அகதிகளுக்கான வேலை வாய்ப்புகள், மனநல சுகாதார செயல் திட்டம், கவனிப்பு மற்றும் சிகிச்சையை ஊக்குவித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை தணிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவை குறித்து கருத்துரு வழங்கப்பட்டது.

இப்போட்டியில் பங்கேற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ். ஜி. லெட்சுமி, பேச்சியம்மாள் தேவி, பெரிய முத்துக்குமார், ஆப்ரகாம் சாமுவேல், அஜய்குமார், ஆசிரியை திவ்யா லட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் இவர்களில் ஆபிரகாம் சாமுவேல், அஜய்குமார் ஆகியோர் சிறப்பு சலுகைகளைப் பெற்றனர்.  

இவர்களுக்கு சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகத் தலைவர் மொஹ்னீஷ் பரத்வாஜ் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை தூதர்களுக்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை

24 மணி நேரம் நடைபெற்ற கணினி ஆன்லைன் பட்டறையில் தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

ஜியுவிஐ எனும் தகுதியான தொழிற்நுட்ப நிறுவனம், என்இஏடி எனும் தேசிய கல்விக்கான கற்பித்தல் நிறுவனம் இணைந்து கணினி ஆன்லைன் பட்டறை நடத்தியது. கின்னஸ் உலக சாதனைக்காக இந்தியா 1. 0 என்ற தலைப்பில் தொடர்ந்து மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 24 மணி நேரம் நடைபெற்ற இந்த கணினி பட்டறையில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த பட்டறையில் ஏஐ குறியீடு குறித்த கின்னஸ் உலக சாதனைக்கு “பைத்தானைப்” பயன்படுத்தி முக அங்கீகாரப் பயன்பாட்டை உருவாக்குவது குறித்த இலவச ஆன்லைன் பயிற்சி நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து 3 மணி நேரத்திற்கு ஒரு தேர்வு நடைபெற்றது.

ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகர் தி. மிராக்ளின் பால்சுசி தலைமையில் பள்ளி முதல்வர் எஸ். சவுமியா, ஆசிரியர்கள் பி. சிவகுமரன், பி. சிவசுப்பிரமணியன், திவ்யா லெட்சுமி, ஜெயபொற்செல்வி,

12ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், பவதாரணி பால்துரை, 11ம் வகுப்பு மாணவர்கள் அஜய்குமார், ஸ்ரீராம், ஷர்மிளா, செய்யது அலி, ஹரிணி முத்துராஜ், முகமது தவுபிக், 10ம் வகுப்பு மாணவர்; கணேஷ்குமார், 9ம் வகுப்பு மாணவர் நரேன் கிருஷ்ணபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு கணினி ஆன்லைன் பட்டறையில் கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

இவர்களுக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சாதனை படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

< 1 ... 4 5 6 7 8 ... 20 >