தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் பணிக்காக தங்கியிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு கொரோனா தடுப்பு வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் உத்தரவின்பேரில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா வழிகாட்டுதலின் பேரில் இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா பிரிவு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கான கொரோனா தடுப்பு வழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மத்திய போலீஸ் படை உதவி கமி~னர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆய்வாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தாபிரிவு மருந்தாளுநர் நூர்ஜகான், வட்டார சுகாதார புள்ளியியலர் ஆனந்த் ஆகியோர் மத்திய போலீசாருக்கு கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனைகளை கூறி அவர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினர்.
மேலும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.