தென்காசி மாவட்ட மெட்ரிக், மெட்ரிக்மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் சங்கத்தினை தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இச்சங்கத்தின் தொடக்க விழா கடையநல்லூர் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு சங்க புரவலரும் ஹில்டன்மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஆர்.ஜெ.வி.பெல் தலைமை தாங்கினார்.
சட்டத்துறை பேராசிரியர் டாக்டர் எம்.இ.டி.முகமது, சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்;. சங்கதலைவரும் எவரெஸ்ட் கல்வி குழும தலைவருமான எஸ்.முகைதீன்அப்துல் காதர் வரவேற்று பேசினார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் சங்கத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்து பேசியதாவது:
மழைபெய்து ஓடோடிவரும் தண்ணீரை சேமிக்காமல் விட்டு விட்டால் அது கடலில் கலந்து உப்பு தண்ணீராகி வீணாகிவிடும். ஓடும் தண்ணீரை தடுத்து நிறுத்தி அணை கட்டி சேமிக்கும்போது தேவைப்படும் போது தண்ணீரை நாம்குடிநீருக்கும், விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கும் நாம் பயன்படுத்த முடியும்.
மாணவர்களும் தண்ணீரைப் போன்றவர்கள்தான். அவர்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கு ஒழுக்கம், கல்வி அறிவு புகட்டி அவர்களை நல்வழிப் படுத்தி, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற, பொதுமக்களுக்கு சமூகசேவை செய்ய பள்ளிகள் உதவி செய்து வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு அனைத்துதரப்பு மாணவர்களின் நலனுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சுகுணாசிங் பேசினார்.
விழாவில் சங்கத்தின் துணைத்தலைவரும் எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜி.பாலமுருகன், துணைச் செயலாளரும் எஸ்எம்ஏ மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜி.இராஜசேகரன், பொருளாளரும் ஸ்ரீராம் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி தாளாளருமான எம்.காளியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும இயக்குநர் வழக்கறிஞர் தி.மிராக்ளின்பால்சுசி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்கள் யுஎஸ்பி செல்வராஜ், நியு கிரஸண்ட் செய்யது சுலைமான், ஸ்ரீகோமதிஅம்மாள் ராஜேஸ்கண்ணா, செயிண்ட் ஜோசப் ரோணி, ஸ்ரீகண்ணா சுபாஷ் கண்ணா, அல்அசார் காதர்அலி, விஸ்டம் ஜெய்லாணி, சக்ஸஸ் நாகராஜன், கிங்ஆப் கிங்ஸ் பிரசாந்த்,
எவரெஸ்ட் சேக்முகமது, நேசனல் பப்ளிக் இராஜ்குமார், மவுண்ட் ஹில்டன் டாக்டர் பிராம்டன் ரத்னபெல், ஆக்ஸ்போர்டு பப்ளிக் மிராக்ளின் பால்சுசி, நியு கேம்பிரிட்ஜ் அக்பர்அலி மற்றும் பள்ளி தாளாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் சங்க செயலாளரும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி பள்ளி தாளாளருமான தி.அன்பரசி திருமலை நன்றி கூறினார்.