News

News

துளிர் திறனறிதல் தேர்வு ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

நெல்லையில் நடைபெற்ற துளிர் திறனறிதல் தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் நெல்லையில் துளிர் திறனறிதல் தேர்வு  நடைபெற்றது. இத்தேர்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இத்தேர்வில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிவபிரகாசம்,  இளந்தெரியன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

யோக் மாரத்தான் போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் முதலிடம்

நெல்லை கோடகநல்லூரில் நடைபெற்ற யோக் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிiலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார். நெல்லை கோடகநல்லூரில் யோக் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்; திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை ஐ.பி.எஸ்.அதிகாரி  பிரதீப், டிஎஸ்பி சுபாஷினி ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 கி.மீ., தூர மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார். இவருக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முதலிடம் பெற்ற மாணவர் பாரத்தை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்பயிற்சி ஆசிரியர் செல்வன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குடியரசு தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்சி) பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை முன்னிலை வகித்தார். மாணவி மகாலெட்சுமி வரவேற்று பேசினார். கல்வி குழும இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்று அளிக்கப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி காவ்யா நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வினை சந்திக்க இருக்கின்றனர். இதனால் அம்மாணவ, மாணவிகள் அரசு தேர்வினை எதிர்கொள்ள ஆசிரியைகளின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை தலைமை தாங்கினார். ஆசிரியை பிளிசி வரவேற்று பேசினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தார். முகாமில் தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் மாணவர்களின் திறனை மேம்படுத்த ஆசிரியைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர். ஆசிரியைகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை ஜான் டயனா நன்றி கூறினார்.

ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் கலைப் போட்டிகள்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலைப் போட்டிகள் நடைபெற்றன. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலைப் போட்டிகள் நடைபெற்றன. 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை நடைபெற்ற இப்போட்டிகளில் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  பாட்டுக்கு நடனம், ஏசோப், அமர் சித்ரா கதை கூறி நடிப்பு, சுற்றுச்சூழல் பேணுதல், பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட கதைக்கு ஏற்றவாறு நடிப்பு மற்றும் இசை போட்டி, அக்பர், பீர்பால் மற்றும் தெனாலிராமன் போன்று நகைச்சுவை திறன் போட்டி, சொற்றொடர் போட்டி, பாட்டு இயற்றும் போட்டி, தலைப்பு கொடுத்து கதை கூறும் போட்டி, செய்திதாள் வெட்டி நகல் எடுத்து ஒட்டும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  இதில் திரளான மாணவ, மாணவிகள் தனிநபராகவும், குழுவுடன் சேர்ந்தும்  கலந்து கொண்ட இப்போட்டிகளில் 50க்கும் மேற்பட்டோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள்  ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியின் 18வது ஆண்டு விழா : ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் பங்கேற்பு

மாணவர்களுக்கு பெற்றோர் வழிகாட்டியாகவும், ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கின்றனர் என தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் பேசினார். தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்சி) பள்ளியில் 18வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு கல்வி அறக்கட்டளை சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை வசந்தி வரவேற்றார். ஆசிரியர் சிவக்குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தனார். நீதிபதி ராஜேஷ்வரன் கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மறக்கக் கூடாது. மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். எப்படி ஒருவன் வளர்கிறான் என்பதனை கல்வி அறிவுடன் ஒழுக்கமும் நிர்ணயிக்கிறது. இன்றைய சிக்கலான சமுதாய அமைப்பில் ஒழுக்கம் மிகவும் அவசியம். புலிக்கு அஞ்சிய மனிதன் மரத்தின் மீது ஏறினார். மரத்தில் ஏற்கனவே குரங்கு ஒன்று தனது குட்டியுடன் இருந்தது. கீழே நின்ற புலி குரங்கை பார்த்து அந்த மனிதனை கீழே தள்ளி விடு. நான் அவனை சாப்பிட்டு விடுகிறேன். உன்னையும் உன் குட்டியையும் விட்டுவிடுகிறேன் என்றது. அதற்கு குரங்கு என்னை சரணாகதி அடைந்தவர்களை காப்பாற்றுவது எனது கடமையாகும்.  ஆகவே நான் மனிதனை கீழே தள்ளிவிட மாட்டேன் என்று கூறியது. இதன் பின்னர் குரங்கு தனது குட்டியை மனிதனிடம் கொடுத்து விட்டு மரத்தில் கிடந்த பழங்களை பறித்துக் கொண்டிருந்தது. அப்போது புலி மனிதனைப் பார்த்து நீ வைத்திருக்கும் குரங்கு குட்டியை கீழே போட்டு விடு. நான் அதனை சாப்பிட்டு விட்டு உன்னை விட்டு விடுகிறேன் என்றது. உடனே மனிதன் குரங்கு குட்டியை கீழே போட்டுவிட்டான். புலி குரங்கு குட்டியை சாப்பிட்டுவிட்டது.  பழங்கள் பறித்துக் கொண்டு வந்த குரங்கு தனது குட்டியை புலிக்கு மனிதன் இரையாக்கியதை கண்டு வருந்தியது. அப்போது புலி பார்த்தாயா குரங்கே நீ நம்பி மனிதனிடம் உன் குட்டியை ஒப்படைத்தாய். ஆனால் அந்த மனிதனோ நான் கேட்டதும் உனது குட்டியை கீழே போட்டு விட்டு அவன் உயிர் தப்பிவிடலாம் என எண்ணியுள்ளான். இப்போதாவது அந்த மனிதனை கீழே தள்ளி விடு என கூறியுள்ளது. அதற்கு குரங்கு நான் மனிதன் அல்ல என்றது. இதனால் ஏமாற்றத்துடன் புலி திரும்பிச் சென்றது. இதனை கண்ட மனிதன் வெட்கி தலைகுனிந்தான்.  சமுதாயத்தில் நாம் சாதிக்க வேண்டும். இதற்கு பணம், பதவி தடையல்ல. மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் வழிகாட்டியாகவும், ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கின்றனர். சந்தர்ப்பங்கள் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைத்து நிற்காது. எனவே மாணவ, மாணவிகள் கஷ்டப்படாமல் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு நீதிபதி ராஜேஷ்வரன் பேசினார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற பதிவாளர் நீதிபதி உதயன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீனாட்சி சுந்தரம், பாண்டுரங்கன், சட்டத்துறை பேராசிரியர் முகமது, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் அருள்வடிவு (எ) சேகர், பேராசிரியை அனார்கலி, தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ராமசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவர்கள் ருத்ரேஷ் வசந்த், முகமது மீரான்ஷமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் ஆக்ஸ்போர்டு கல்வி அறக்கட்டளை இயக்குநர் மிராக்ளின் பால் சுசி நன்றி கூறினார்.

மாவட்ட டேக்வாண்டோ போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.           திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை சதக்அப்துல்லா அப்பா கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஹரீஸ் கார்த்திக், ஸ்ரீராம் ஆகியோர்  சீனியர் பிரிவில் 78 கிலோவுக்கு மேல் உள்ள எடைப்பிரிவில் முதலிடமும்,  மாணவர் அபுபக்கர் சித்திக் 68 கிலோ முதல் 73 கிலோ வரை உள்ள எடைப்பிரிவில் முதலிடமும், சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர் லிமான் 52 கிலோ முதல் 55 கிலோ வரை உள்ள எடைப்பிரிவில் முதலிடமும், மாணவர் லியோன் 55 கிலோ முதல் 58 கிலோ எடைப் பிரிவில் முதலிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமங்களைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎஸ்இ பள்ளி மாணவி தன்வந்தி நேரு வேடமணிந்து வந்து வரவேற்று பேசினார்.  இரு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியே விளையாட்டு போட்டிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப் போட்டி, வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நேரு வேடமணிந்து வந்த மாணவி தன்வந்தி, மாணவர் பிரித்திவ் வர்மா ஆகியோருக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை பரிசு வழங்கி பாராட்டி பேசினார். ஜவர்ஹலால் நேரு பற்றியும், அவரது பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடுவது பற்றியும் மாணவ, மாணவிகள் பேசினர். நேரு பற்றிய புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

< 1 ... 7 8 9 10 11 ... 20 >