News

News

தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டி: ஆக்ஸ்போர்டு பள்ளி அறிவியல் மாதிரி தேர்வு

நெல்லையில் நடைபெற்ற 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இடம்பெற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மாதிரிகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தென்காசி, நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், மாவட்ட அறிவியல் மையம், சமூக ரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி
ஆகியவை இணைந்து நடத்திய நெல்லை அறிவியல் மையத்தில் நேற்று 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் "ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது” என்ற தலைப்பில் அறிவியல் மாதிரிகள் படைக்கும் போட்டிகள் நடைபெற்றது. 

இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி
குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என்.சபரீஸ்,ஆர். திவாகர் ஆகியோர் “மின்சார அதிர்ச்சியில் இருந்து வனவிலங்குகளை பாதுகாக்கும் சாதனம்” என்ற தலைப்பில் உருவாக்கிய அறிவியல் மாதிரியும்,

இதே பள்ளி மாணவர்கள் சி. தயா விக்ரம், மாதேவிஷ்; ஆகியோர் உருவாக்கிய 'மாற்றுத்திறனாளிகளுக்கான தானியங்கி சுற்றுச்சூழல் குப்பைத் தொட்டி' மாதிரியும் தேர்வு செய்யப்பட்டது.

இம்மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் அறிவியல் மாதிரிகளை அறிமுகம் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்ட ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்களை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான 
கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான 
தி. மிராக்ளின் பால்சுசி,
தலைமையாசிரியை குழந்தைதெரசா, உதவி
தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

<< Go back to the previous page