எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 104 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும்; முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 43 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 78 பேரும் பெற்றுள்ளனர்.
மேலும் சமூக அறிவியல் பாடத்தில் 14 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 99 மதிப்பெண்களை மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மற்றும் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றம் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.