News

News

சாரல் 2023 போட்டிகளில் ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன்

செங்கோட்டை அருகே நடைபெற்ற சாரல் 2023 போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புதூர் புலரி மெட்ரிகுலேசன் பள்ளியில் தென்காசி கல்வி மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சாரல் 2023 போட்டிகள் நடைபெற்றன.

ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் மற்றும் அருவி அகாடமி பைன் ஆர்ட்ஸ் இணைந்து நடத்திய சாரல் 2023 போட்டிகளில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிலம்பம், யோகா, கீபோர்டு, ஸ்கேட்டிங் மற்றும் பரதநாட்டிய போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 108 பேர் கலந்து கொண்டனர். இதில் யோகா போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் அமுதேஷ், சோனிஸ்ரீ, வேதா, நதிமா ஆகியோர் முதலிடமும், யோஜித், முகேஷ், சுபகார்த்திகா, மதன்குமார், மகாலெட்சுமி, வெற்றிவேல் முருகன் ஆகியோர் இரண்டாமிடமும், கார்த்திக் லாவனேஷ், ஸ்ரீ சக்தி, முதுகிஷரா, சிவசக்திவேல் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.

ஸ்கேட்டிங் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் முகமது அசார், சிவகார்த்திகேயன், வைஷ்ணவ், விஷ்ணு ஸ்ரீ மாரி முகேஷ், யாகேன் மார்க்வாக், நமதேஷ், அனுஷ்; பாலு, முருகவேல் ஆகியோர் முதலிடமும், ஸ்ரீராம் வைசாக், ரான்ஷா பெர்னாண்டோ, யோகேஷ், பஸ்பக் ராஜா ஆகியோர் இரண்டாமிடமும், தீன பிரஜித், முகமது அப்ரித், சித்தார்த், ஆதிஷ், கலிட்பாவா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.

சிலம்ப போட்டியில் ஸ்ரீரதீஷ்; பாலன், பிரபாகர், கவிஷ்; ஆகியோர் முதலிடமும், சரவண சுப்பையா, ஜெயகவுதம், நவீன், பொன்னீஸ்வரன், சிவதர்சன், சந்தோஷ் ஆகியோர் இரண்டாமிடமும், சதீஷ் குமார், ராம் கிஷோர், உமர்பாரூக், பாலகாந்த், அக்ஷயா மாலினி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். 

கராத்தே போட்டியில் முகமதுஷாஜித், சந்தோஷ் ஆகியோர் முதலிடமும், கபிஷ் இரண்டாமிடமும், கரிஷ் ராம், அபிசேக்ராம் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.

பரத நாட்டியத்தில் பிரணவி இரண்டாமிடம் பெற்றார். கீ போர்டில் கிருத்திக் முதலிடமும், ஜிவின்ரோ ரகோபத் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

     மேலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

     வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

<< Go back to the previous page