தென்காசியில் நடைபெற்ற காந்தி-சத்தியமூர்த்தி நினைவு பேச்சுப் போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். தென்காசி காந்தி-சத்தியமூர்த்தி நினைவு விழாக்குழு சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. தென்காசி மலர் ஐ.டி.ஐ.வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு சுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆரம்பப் பள்ளி அளவில் காந்தியடிகள் என்ற தலைப்பில் பேசிய தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கார்த்திகா முதலிடம் பெற்றார். மேலும் நடுநிலைப் பள்ளி அளவில் சுதந்திரப்போராட்டம் என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி ~ரபினாவும், உயர்நிலைப் பள்ளி அளவில் தீண்டாமை என்ற தலைப்பில் இப்பள்ளி மாணவி சண்முகப்பிரியாவும், பாதர் ஆப் அவர் நேசன் என்ற தலைப்பில் பேசிய இப்பள்ளி மாணவி மகேஸ்வரியும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.