பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். சிவாணி முதலிடமும், இதே பள்ளி மாணவி எம். மகாலெட்சுமி மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 99 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளி மாணவி எம். சிவாணி 600 மதிப்பெண்களுக்கு 591. 46 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-98. 95, ஆங்கிலம் -98. 06, இயற்பியல்-98. 88, வேதியியல்-98. 88, உயிரியல்-97. 74, கணிதம்-98. 95.
இப்பள்ளி மாணவி எம். மகாலெட்சுமி 587. 95 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார்.
இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-99. 12, ஆங்கிலம்-97. 12, இயற்பியல்-97. 63, வேதியியல்-97. 91, உயிரியல்-97. 05, கணிதம்-99. 12.
இப்பள்ளி மாணவி வி. மதுமிதா 582. 63 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-98. 40, ஆங்கிலம்-96. 17, இயற்பியல்-96. 55, வேதியியல்-97. 98, உயிரியல்-95. 13, கணிதம்-98. 40.
சாதனை படைத்த, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்சி) பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி,
தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.