75 வது பவள விழா சுதந்திர தின விழாவில் தென்காசி ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் நடந்த 75 வது பவள விழா சுதந்திர தின விழாவில் மூவர்ண தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஏற்றிவைத்து காவல்துறை அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 75வது பவள விழா சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி இ. சி. ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த 75 வது பவள விழா சுதந்திர தின விழாவில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர், வனத்துறை, ஊர்க்காவல்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார். இதனைத் தொடர்ந்து சமாதானப் புறாக்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பறக்க விட்டனர்.
இதனைத் தொடர்ந்து விழாவில் மொத்தம் 210 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களையும் , 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சுதந்திரப் போராட்ட தியாகிகளை கெளவரப்படுத்தி பொன்னாடை போர்த்தினார்.
தென்காசி மாவட்டம் உதயமாகிய பின்னர் 4வது ஆட்சியரான ஆகாஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.