News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் கார்கில் வெற்றி தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் கார்கில் பகுதியை கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஆக்ரமிப்பு செய்தது. இதனை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரில் கார்கில் இந்திய ராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இதனை அடுத்து ஆண்டு தோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு கார்கில் வெற்றி தினம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஷருண்யா வரவேற்றுப் பேசினார்.

தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் கார்கில் போர் பற்றி பேசினர். மாணவர்கள் நித்தின், ராகுல், பாலசுப்பிரமணியன், கவின்காட்மியல், ராஜாஹரிஹரசுதன், மாணவிகள் ப்ளஸ்ஸி, முகிலரசி, லெட்சுமி, நித்யஸ்ரீ, திவ்யதர்ஷினி, ஜெனத்துள் பிர்தௌஸ், தீபிகா, புவனேஸ்வரி, திவ்யா, பேச்சிமாதேவி ஆகியோர் கார்கில் வெற்றி என்ற தலைப்பில் பேசினர். கார்கில் நடன நிகழ்ச்சி நடந்தது. கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவி விஷ்ணுப்பிரியா நன்றி கூறினார்.

 

<< Go back to the previous page