தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாதுளம் பழ தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாதுளம்பழத்தின் பெருமையை விளக்கும் வகையில் மாதுளம் பழ தின விழா நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் மாதுளம் பழத்தின் விதைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி காயத்ரி வரவேற்றுப் பேசினார்.மாணவிகள் ஜெசிகா, தேவி ஆகியோர் இறை வணக்கம் பாடினர். மாணவி சுகாசினி அறிமுக உரையாற்றினார். மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் அதன் மருத்துவ பயன் குறித்து தலைமை யாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் பேசினர். மாதுளம்பழத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பாடல், நடனம், கவிதை வாசித்தல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிகளை மாணவர் முகம்மது யூனுஸ், மாணவி ஜென்ஸிய பாத்திமா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி கபிலா நன்றி கூறினார்.