நெல்லையில் நடைபெற்ற மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை விங்ஸ் உள் விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மூத்தோர் பிரிவிற்கான இறகுப் பந்துப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் நவீன் வெற்றி பெற்றார். இவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர் நவீனை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.