இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய அறிவியல் இன்ஸ்பயர் விருதுக்கான போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்றனர்.
மத்திய அறிவியல் மற்றும் தொழி;ல்நுட்ப அமைச்சகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் இன்ஸ்பயர் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெய்சுதர்வேல் இணைய தூசிகளை எடுத்துச் செல்லும் தானியங்கி என்ற தலைப்பிலும்,
இப்பள்ளி மாணவர் அசிம் முஸ்தபா கார் விபத்து தடுப்பு என்ற தலைப்பிலும், இப்பள்ளி மாணவி மதுபாலா காலணிகளில் இருந்து மொபைல் சார்ஜிங் என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.
இதில் இவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் சான்றிதழ்களும், ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசும், மாவட்ட அளவிலான அறிவியல் இன்ஸ்பயர் விருதும் வழங்கப்பட்டன.
அறிவியல் இன்ஸ்பயர் விருது பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறி ஞர் தி. மிராக்ளின் பால் சுசி,
பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.