தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் கோவிட் -19 தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு (15 வயது முதல் 18 வயது வரை) சிறார் கோவிட் 19 தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.
டாக்டர் இந்துமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலு ஆகியோர் தலைமையில் மருந்தாளுநர் முகம்மது தாரிஹ், செவிலியர்கள் பேச்சியம்மாள், பார்வதி, கலைச்செல்வி, எம்டிஎம் ஊழியர் வனஜா ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு சிறார் கோவிட் -19 தடுப்பூசிகளை போட்டனர்.
முகாமில் முதற்கட்டமாக 260க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முடிவில் நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.