News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் தீ தொண்டு வார விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழா கொண்டாடப்பட்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் தென்காசி மாவட்ட அலுவலர் கவிதா தீ விபத்தை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள் பற்றி விளக்கினார்.

கூடுமானவரை எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கீற்று போன்ற கூரை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். தீ பிடிக்காத ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், டின் தகரம் போன்ற பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். சமையல் முடிந்ததும் அடுப்பினை கவனத்துடன் முழுவதுமான அணைத்து விட வேண்டும். சமையல் வேலையின் இடையே அடுப்பினை எரிய விட்டு விட்டு வெளியே செல்ல வேண்டாம். வேறு நபர் இல்லாவிட்டால் அடுப்பினை அணைத்துவிட்டு வெளியே செல்ல வேண்டும். ஸ்டவ் எரிந்து கொண்டிருக்கும் போது மண்ணெண்ணெய் ஊற்றக் கூடாது. ஸ்டவ்வை அணைத்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்ற வேண்டும். நெருப்புடன் கூடிய சாம்பலை குப்பையில் கொட்ட கூடாது.

மின் வயர்களை பயன்படுத்தும் போது இணைப்புகளை இன்சுலேட் டேப்பினால் பாதுகாப்பாக சுற்ற வேண்டும். குடிசைப் பகுதிகளின் அருகில் வைக்கோல் போர்களை அமைக்க வேண்டாம்.

சிலிண்டரில் இருந்துஅடுப்புக்குச் செல்லும் டியூப்பை அடிக்கடி செக்கப் செய்து தரமான கம்பெனி டியூப்பை பொருத்தவும். கேஸ் லீக்கேஜ் ஏற்படும் போது மின்சார சுவிட்சுகளை உபயோகப்படுத்தக் கூடாது.

ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். மேலும் சிலிண்டரை திறந்த வெளியில் வைக்க வேண்டும். திருவிழா மற்றும் விசேஷ காலத்தில் கூரையைப் பயன்படுத்தாமல் தகர ஷீட் பயன்படுத்த வேண்டும்.

விழாக்கலங்களில் வாண வேடிக்கையைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் அலுவலர் கவிதா மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், தென்காசி தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் ரமேஷ், நிலைய வீரர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

<< Go back to the previous page