தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக திருவிழா நடைபெற்றது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற புத்தக திருவிழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.
பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்து உலக புத்தக தினம் பற்றி சிறப்புரையாற்றினார்.
புத்தக கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான தமிழ், ஆங்கில புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற புத்தக கண்காட்சியினை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
புத்தகத் திருவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை பரிசு வழங்கி பாராட்டினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.