தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மழலையர் பட்டமளிப்பு விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார்.
ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி முன்னிலை வகித்தார். தாமிரயாழினி, சுபிக்ஷா ஸ்ரீ, கவின்ராஜ், பிரதிக்பால் ஆகியோர் இறைவணக்க பாடல் பாடினர். மாணவி நசினி வரவேற்று பேசினார்.
பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தி பேசினர்.
மாணவர் அஜ்மல் இந்தி உரையாற்றினார். யோசித், கார்திக் லாவனிஷ், கவின்ராஜ், அபினர், சர்மினி, ஸ்ரீ கிருத்திகா, ஸ்ரீ சக்தி, சுபிக்ஷா ஸ்ரீ, ராஜலலிதா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை கவிமித்ரா, அபிஷேக்ராம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
முடிவில் மாணவி ஸ்ரீ நர்சினி நன்றி கூறினார்.