News

News

கலைஞர் பிறந்தநாள் விழா போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி

தென்காசி வ. உ. சி. வட்டார நூலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

தென்காசி வ. உ. சி. வட்டார நூலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியப் போட்டியில் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி 5ம் வகுப்பு மாணவி க. அக்ஷ்ய ஸ்ரீ முதலிடம் பெற்றார். கட்டுரைப் போட்டியில் இப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி ச. அமிர்தவர்ஷினி மூன்றாமிடம் பெற்றார்.

பேச்சுப் போட்டியில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி வெ. செல்வதாரணி முதலிடம் பெற்றார். ஓவியப் போட்டியில் இப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் பி. நடராஜன் மூன்றாமிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வ. உ. சி. வட்டார நூலகம் சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

<< Go back to the previous page