News

News

ஆக்ஸ்போர்டு பள்ளிக்கு வந்த இயக்குநர் : பொதுதேர்வு குறித்த பயிற்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத் தேர்வினை எதிர்கொள்வது குறித்த புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார். திரைப்பட இயக்குநர் அமீர் அப்பாஸ் அமைதியான படிப்பு, எளிதில் பொதுத்தேர்வினை எதிர்கொள்வது, மன அழுத்தத்தை குறைப்பது, மாணவர்களின் கடமை, நல்ஒழுக்கம், எளியவர்களிடம் கருணை காட்டுவது, பிறரிடம் அன்பு காட்டுவது, சமூக சேவை, உள்ளிட்டவைகள் குறித்து பேசி மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தார்.மேலும் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமீர் அப்பாஸ் பதில் அளித்தார். முகாமில் மாணவ, மாணவிகளுடன் ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

<< Go back to the previous page