News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் நகர் ஊரமைப்பு துறை கூட்டம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நகர் ஊரமைப்பு துறை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், தென்காசி மாவட்ட மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய நகர் ஊரமைப்பு துறை பற்றிய விளக்கக் கூட்டம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களில் நிறுவனர் மற்றும் தலைவரும், தென்காசி மாவட்ட மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க தலைவருமான டாக்டர் முகைதீன் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.  

சங்க சட்ட ஆலோசகரும், ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை வரவேற்று பேசினார்.

தென்காசி மாவட்ட நகர் ஊரமைப்பு இணை இயக்குநர் ப. ரங்கநாதன் பள்ளி கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறையில் அனுமதி பெறுவது குறித்து விளக்கி பேசினார். மேலும் இதுகுறித்து பள்ளிகளின் தாளாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இணை இயக்குநர் பதில் அளித்தார். பொறியாளர் பாலசுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார்.


கூட்டத்தில் பாரத் கல்வி குழும தாளாளர் வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன், யுஎஸ்பி கல்வி குழும தலைவர் செல்வராஜ்,  ஆக்ஸ்போர்டு கல்வி குழும தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, எஸ்எம்ஏ கல்வி குழும இயக்குனர் ரா. ராஜ்குமார், ஹில்டன் பள்ளி, அக்பர் பள்ளி, அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீராம் பள்ளி, செயிண்ட். ஜான்ஸ் பள்ளி, ஸ்ரீராம் வித்யாலயா,

செயிண்ட். அசீஸ் பள்ளி, பிரியண்ட் பள்ளி, ஸ்ரீபாரதிகண்ணா பள்ளி, விஸ்டம் பள்ளி, ஜாய் பள்ளி, நியு கேம்பிரிட்ஸ் பள்ளி, நியு கிரஸண்ட் பள்ளி, செவன்த்டே பள்ளி, ஹிந்து நாடார் உறவின் முறை பள்ளி,  செய்யது பள்ளி, சாதனா வித்யாலயா,

இம்மானுவேல் பள்ளி, இமாம் கஸாலி பள்ளி, எம்எஸ்பிபி பாலிடெக்னிக் கல்லூரி, வீரமாமுனிவர் ஆர்சி பள்ளி, செயிண்ட் மேரிஸ் பள்ளி, புலாரி பள்ளி, அல் அசார் பள்ளி, லயன்ஸ் மகாத்மா பள்ளி உட்பட 50க்கும் மேற்பட்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

<< Go back to the previous page