தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி முத்து பிருந்தா வரவேற்று பேசினார். குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் தலைவர் சத்யராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி நன்றி கூறினார்.