தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பம், யோகா, ஸ்கேட்டிங் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்பம், யோகா, ஸ்;கோட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேர்கள் பங்கேற்றனர்.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம், யோகா, ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனர். இவர்களுக்கு தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் புதியபாஸ்கர் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும்,
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.