மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தங்கப் பதக்கம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் வில்வித்தை சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ராகவேந்திரன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று வில்வித்தை சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
இம்மாணவர் தேசிய அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் ராகவேந்திரனை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.