News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக வாழ்நாள் விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக வாழ்நாள் விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக வாழ்நாள் விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஷிவானி வரவேற்றுப் பேசினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, இயற்கையை பேணுதல், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவி மதுமிதா ஆகியோர் பேசினர்.  மாணவர்கள் வசந்தராஜா, சஞ்சை, ஸ்ரீராம்,  சுபாஷ் வசந்தனர், இளவரசு, சக்திநவீன், கோபாலகிருஷ்ணன், உதய இசை, சங்கரமகாலிங்கம் ஆகியோர் நாம் இயற்கையை பாதுகாத்தால் நம்மை இயற்கை வாழ வைக்கும் என்ற கருத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.சுற்றுச்சூழலை பாதுகாப்போம், சுகாதாரத்தை பேணுவோம், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவி சண்முகப்பிரியா நன்றி கூறினார்.

<< Go back to the previous page