தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் குழந்தைகள் தின
விழா கொண்டாடப்பட்டது.
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள்
தென்காசி குத்துக்கல்;வலசை ஆக்ஸ்போர்டு பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழா குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால்சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா, வரவேற்று
பேசினார்.
முன்னாள் பிரதமர் நேரு போன்று வேடமணிந்த மாணவ, மாணவிகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்தியாவை உருவாக்கிய சிற்பி, நேரு மாமா, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உட்பட திரளானோர் கலந்து
கொண்டனர்.
முடிவில் பள்ளி உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் நன்றி கூறினார்.
ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் மாணவ, மாணவிகள் நேரு
வேடமணிந்து வந்தனர். பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
அவற்றில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால்சுசி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.