News

News

மாநில யோகா போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி

குற்றாலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் சன் யோகா ஹெல்த் கேர் அசோசியேசன் சார்பில் தமிழ்நாடு யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்-2022 போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீசக்தி, போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் சோனிஸ்ரீ, ஆல்பர்ட் ஜெய்சன், மதன்குமார், நதிமா, ராஜேஷ்; ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இப்பள்ளியைச் சேர்ந்த சன்ஜனா, வேதா, ஹரிணி, மதுகிஷரா, மகாலட்சுமி, சிவ சக்திவேல் ஆகியோர் இரண்டாமிடமும், அமுதஸ், சுககார்த்திகா, யோஷத், மாதவன் ஆகியோர் மூன்றாமிடமும், வெற்றிவேல் முருகன், முத்துலட்சுமி ஆகியோர் சிறப்பிடமும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான      கே. திருமலை,  பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி, வழக்கறிஞருமான       தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

<< Go back to the previous page