News

News

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்ட நுழைவுத் தேர்வு ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை.

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்ட நுழைவுத் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 21 பேர் வெற்றி பெற்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித்
திறனை மேம்படுத்த பிரதமர் மோடி பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதனடிப்படையில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெறும் மாணவர்களுக்கு
நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் பொது அறிவு குறித்த கேள்விகள் அடங்கிய தேசிய அளவிலான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்ட நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய தேர்வு முகாமை நடத்தியது.

இத்தேர்வில் பங்கேற்ற தென்காசி
குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு மாணவர்கள் அஜய்கிருஷ்ணா, தீபிகா, லீமபிரியா, ராஜ ஹரிஹர சுதன், ஜனனி, குரு பிரதீப், ராகுல், வசந்த், அனுஸ்ரீ, மதன்குமார், தன நந்தகுமார், குருபிரசாத், ஆகாஷ் ஆகியோரும்,

9ம் வகுப்பு மாணவர்கள் சுபிக்ஷா, ஆர்த்தி, சபரீஷ், மஞ்சு, பரத்குமார், செல்வதாரணி, ஜெய்சுதர்வேல், மகாலெட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர். மாவட்டத்தில் அதிக மாணவர்கள் வெற்றி பெற்ற பள்ளிகளில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.

தேர்வில் வெற்றி பெற்ற 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரமும், 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையாக ரூ. 75 ஆயிரமும் வழங்குகிறது. பள்ளி கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் கல்வி சார்ந்த கட்டணங்களை இத்தொகையில் இருந்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் செலுத்திக்
கொள்ளலாம்.

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான      கே. திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான       தி. மிராக்ளின் பால்சுசி,
தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை யாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

<< Go back to the previous page