இலஞ்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியான மெர்வின் முதலிடம் பெற்றார்.
தென்காசி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை இறகு பந்து விளையாட்டுப் போட்டிகள் இலஞ்சி இராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இப்போட்டிகளில் ஒற்றையர் பிரிவு பெண்களுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியான மெர்வின் முதலிடம் பெற்றார். இவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இம்மாணவி மாநில அளவிலான இறகு பந்து போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவி ரியான மெர்வினை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.