தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பப்பாளிப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாம் உண்ணும் பழங்களின் பயன்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பழங்கள் தின விழா தனித்தனியே கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் பப்பாளிப் பழத்தின் பயன்களை தெரிந்து கொள்ளும் வகையில் பப்பாளிப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி காசிரா வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவி யோகேஸ்வரி, மாணவர் நிதிஷ் ஆகியோர் பப்பாளிப் பழத்தின் பயன்கள் மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றி பேசினர். மாணவர் மகாதேஷ் செல்வா பப்பாளிப்பழத்தின் வரலாறு பற்றி பேசினார். மாணவிகள் மேகலா, அற்புத ரிஷ்வினா, வர்ஷினி, உமாமகேஸ்வரி, ரம்யா ஆகியோர் பப்பாளிப்பழ பாடல்களை பாடினர். மாணவிகள் கிருஷ்ணபிரியா, கரிஷ்மராம்ஸ்ரீ, அகல்யாஸ்ரீ, சுபஸ்ரீவர்ஷா, அப்ர்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை பிரியலெட்சுமி, இளமுகில் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பப்பாளிப்பழத்தினால் செய்யப்பட்ட பல்வேறு உருவங்கள் மற்றும் எழுத்துக்களின் கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளானோர் கண்டு ரசித்தனர். முடிவில் மாணவர் சந்தோஷ் நன்றி கூறினார்.