தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்மன்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சண்முகப்பிரியா வரவேற்றுப் பேசினார்.தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாணவிகள் ஜனவர்ஷினி, நிதிஷ் நாட்டுப்புறப் பாடல்கள் பாடினர். நித்யகல்யாணி, திவ்ய தர்ஷனா, கவின் காட்மியல் ஆகியோரின் நாடகமும், ஸ்ரீமதி, சீதாலெட்சுமி, சக்தி துளசி, மாரியம்மாள், சரவணசுவேதா, சௌமியா, சுபஸ்ரீ, முகிலரசி, காவியா ஆகியோரின் நடனமும் நடைபெற்றது. ஜனவர்ஷினி, நிதிஷ், நரேன் கிருஷ்ண பெருமாள், ராஜஹரிகர சுதன், சித்தார்த் ஆகியோரின் வில்லிசைக் கச்சேரி நடைபெற்றது. மேலும் விடுகதை, நகைச்சுவை, கதை கூறுதலும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவர்கள் சுபாஷ் சந்திரபோஸ், கவின், ஹரிஷ் கார்த்திக் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி ஜனவர்ஷினி நன்றி கூறினார்.