திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி திண்டுக்கல் ஓமலூரில் நடைபெற்றது. இப்போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.இப்போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் லியோன் 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இம்மாணவருக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை யாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், பயிற்சியாளர் செல்வன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.