தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாள் விழா குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சுபாஷினி வரவேற்றுப் பேசினார்.மாணவர்கள் செந்தூர் ஆறுமுகனார், ஆர்கேஷ், மாணவிகள் ஜனவர்ஷினி, பவதாரணி ஆகியோர் இறைவணக்கம் பாடினர். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் நித்யகல்யாணி, ஸ்ரீநிதி ஆகியோர் நேருவின் வாழ்க்கை வரலாறு பற்றியும், குழந்தைகள் தினம் கொண்டாடுவது பற்றியும் பேசினர். மாணவிகள் ஷபினா, முருகசந்தியா, அமிஷா, காசிம் சுல்தானா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகம், செய்கை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிகளை மாணவர்கள் சுபாஷ சந்திரபோஸ், கவின், மாணவிகள் சௌமியா, பூஜாஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி சாஹானா நன்றி கூறினார்.