தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அன்னாசிப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பழங்கள், காய்கறிகள், பூக்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் விழாக்கள் ண்டாடப்பட்டு வருகிறது. அன்னாசிப் பழம் பற்றி கே.ஜி.மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அன்னாசிப் பழ தின விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் கணேசன், உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவர் ஜென்ஸி வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை ஆகியோர் அன்னாசிப் பழத்தின் தன்மைகள், அதனை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பேசினர். அன்னாசிப்பழத்தின் பெருமையை விளக்கும் வகையில் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அன்னாசிப்பழ கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர்.நிகழ்ச்சிகளை மாணவர் சற்குருசாஷன் தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவர் சஞ்சைவேல் நன்றி கூறினார்.