தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் வெள்ளையனே வெளியேறு இயக்க தின நிகழ்ச்சி நடந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை மகாத்மா காந்தி நடத்தினார். இந்த இயக்கத்தின் 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி பாலதீபிகா வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் கார்த்திகா, விஜயலெட்சுமி மற்றும் தேவ்கார்த்திக்,. விஷாலி, கார்த்திகா, ரேணுகா, பிரின்ஸி ஆகியோர் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி, நேரு, ஜான்சிராணி, சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் பற்றி பேசினர். சுதந்திர போராட்ட வீரர்கள் வேடமணிந்த மாணவர்கள் தலைவர்களின் செயல்பாடுகள் பற்றி பேசினர்.மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளை மாணவிகள் கிரண்கொசிகா, சுஷ்மிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி நிரஞ்சனா ஸ்ரீ நன்றி கூறினார்.