குழந்தைகள் தின மாநில கலை இலக்கியப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். ஈரோடு சாதனையாளர்கள் கல்வி நிறுவனம் சார்பில் மாநில அளவிலான குழந்தைகள் தின கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கையெழுத்துப் போட்டி, நினைவாற்றல் சோதனை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஜய்ராம் ஓவியப் போட்டியில் முதலிடமும், மாணவி நடனபார்கவி இரண்டாமிடமும் வெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவி கௌசிகா இரண்டாமிடமும், உதய இசக்கி, அனுசியா, வைணவி, கையெழுத்துப் போட்டியில் மதுமிதாஆர்த்தி, முத்துசெல்வகுமார், ஹேமன்கனி, சந்தனபிரியா, அபிநயஸ்ரீ, சின்ஜெ ய்வீ ரம ணி, வேல்மயில்திலமதி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை யாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.